திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை பகுதியில் பிறந்தவர் வாஞ்சிநாதன். நெற் பயிர்களோடு சுதந்திர பயிர்களையும் வனப்புடன் வளர்த்த பெருமை வாஞ்சிநாதன் போன்ற ஏராளமான தமிழக்க வீரர்களை சாரும். இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக தமிழகம் தந்த மகத்தான பங்களிப்பில் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் வாஞ்சிநாதன்.
1886 இல் பிறந்து 1911 வரை வாழ்ந்த இவர் செங்கோட்டை பகுதியிலிருக்கும் ரகுபதி ஐயருக்கு ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தவர். இவருடைய நிஜப்பெயர் சங்கரன். பொன்னம்மாள் என்ற பெண்ணை மணந்த இவர் நல்ல சம்பளம் கிடைக்க கூடிய அரசு பணியில் இருந்தார்.
இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்குபெற்ற தமிழக வீரர்களில் குறிப்பிடத்தக்க ஒரு சிலரில் வாஞ்சிநாதன் முக்கியமானவர்.. அவர் திருவான்கூரில் பணியாற்றி வந்த போது வ.ஊ.சி, நீலகண்ட பிரம்மாசாரி, சுப்ரமணிய சிவா மற்றும் சுப்பிரமணி பாரதி ஆகியோருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார். பாரத மாத சங்கத்தின் அங்கத்தினராக இவர்கள் இருந்த போது, வாஞ்சிநாதனின் வழிகாட்டிகளாக இவர்கள் இருந்து வந்தனர்.
திருநெல்வேலியின் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாகவும், மாவட்ட ஆட்சியாளராகவும் இருந்தவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ராபர்ட் வில்லியம் ஆஷே. இவன் அந்த மாவட்ட மக்களின் குறையை களைவதை விடவும் பிரிட்டிஷ் நாட்டிற்கு ஊழியம் செய்வதையே பிரதானமான வேலையாக கொண்டிருந்தான். முதல் உள்நாட்டு கப்பல் கம்பெனியாக அறியப்படும் வ.ஊ.சியின் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக திட்டம் தீட்டியதில் முதன்மையானவன் இந்த ஆஷ். இவனின் முயற்சியினாலே அந்த நிறுவனம் சரிவை சந்தித்தது மற்றும் சிதம்பரனாரும் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாஞ்சிநாதன் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தேசபக்தர்களுடன் தொடர்பு கொண்டார். மெல்ல மெல்ல அவர் தன் அரசு பணியிலிருந்து விலகினார். புதுவையில் புரட்சியாளராக இருந்த வ.வே.சு ஐயர் வீட்டில் அவர் தங்குவதுண்டு. அப்போது நீலகண்ட பிரம்மச்சாரியின் இரத்தப் புரட்சி பிரமாணங்களினால் வாஞ்சிநாதர் சுதந்திர போராட்டத்தில் தன்னை மேலும் தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டார்.
இப்படியான சூழ்நிலையில் 1911 ஜூன் 17 அன்று திருநெல்வேலியிலிருக்கும் மணியாச்சி ரயில் நிலையத்திலிருந்து ஆஷ் துறை அவன் மனைவியோடு கொடைக்கானல்ல் புறப்பட்டான். 10.38 மணியளவில் ரயில் கிளம்பியது . ஆஷ் முதல் வகுப்பில் அமர்ந்திருந்தான். அப்போது அவனை சுட்டு கொன்று விட்டு தானும் சுட்டு கொண்டு அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினார்.