எதிர்ப்புகளை மீறி நீதிபதியாகி சாதனை படைத்த விக்டோரியா கவுரி - கதறும் கருப்பு சட்டைகள்

Update: 2023-02-09 02:05 GMT

இடதுசாரிகளின் எதிர்ப்பை தகர்த்தெறிந்து நீதிபதியாக பதவி நியமனம் பெற்று சந்தித்துள்ளார் விக்டோரியா கவுரி, நாட்டில் பிரிவினைவாதிகள் தற்பொழுது போராட்டம் என்கிற பெயரில் அனைத்தையும் எதிர்ப்பதை வழக்கமாக வச்சுருக்காங்க. இதுக்கு பின்னணியில் சில அரசியல் சக்திகள் மட்டுமில்லங்க தேச விரோத செயல், நக்சல் சிந்தனை அப்டின்னு நிறையவே விஷயம் இருக்கு. இந்த பிரிவினைவாத சிந்தனை இணைக்கு நீதித்துறை வரைக்கும் வந்துருக்கு.

யார் இந்த விக்டோரியா கவுரி, இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஒரு நீதிபதி நியமனத்துக்கு ஏன் இந்த எதிர்ப்பு, ஒரு பெண் அவங்க நீதிபதியா பதவி அடையுறது ஏன் இந்த பெண் உரிமையை பேச்சுல மட்டும் வச்சுருக்கும் சிலருக்கு பிடிக்கல அப்டின்னு பார்த்தா நிறைய பகீர் உண்மைகள் வருதுங்க.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து குரல் எழுந்துட்டே வருதுங்க, அதுக்கு முக்கிய காரணம் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகள் தான். இந்த சூழல்ல தான் வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் நியமன அறிவிப்புல விக்டோரியா கவுரி பெயரை பார்த்தவுடனே இங்க இருக்கு கம்யூனிச ஆட்கள், பிரிவினைவாத போராளிகள் எல்லாருக்கும் உடனே கரண்ட் ஷாக் அடிச்சமாதிரி ஆகிட்டு. உடனே விக்டோரிய கவுரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் அப்டின்னு கோரிக்கை வச்சு போராட்டத்தை அரமிச்சுட்டாங்க. உடனே சமூக வலைத்தளத்தில் எல்லாம் இஷ்டத்துக்கு எழுத அரமிச்சுட்டாங்க.

இதுக்கு காரணம் என்ன? யாரு இந்த விக்டோரியா கவுரி அப்டின்னு பார்த்தீங்கன்னா உங்களுக்கே விவரம் புரியும். கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தை சேர்ந்தவர்தாங்க இந்த விக்டோரியா கவுரி. அவங்ளோட இளங்கலை சட்டப் படிப்பை மதுரை சட்டக் கல்லூரியில் படித்து முடித்து கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படிச்சாங்க. கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக பதவில இவங்க இருகாங்க.

வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கிய நிலையில் பாஜகவின் தீவிர ஆதரவாளரா இவங்க இருந்தாங்க, விக்டோரியா கவுரி பாஜக மகளிரணி தேசிய பொதுச் செயலாளராகவும் பதவில இருந்தாங்க.

இதைவிட இவங்க மேல சொல்ற பெரிய குற்றச்சாட்டு என்னன்னா ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் யுடியூப் பக்கத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பாதிப்பாக இருப்பவர் யார் என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில், ஜிஹாத்தா அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளா? என்ற தலைப்பில் விக்டோரியா அவங்க கருத்தை சொன்னதுதான் இப்ப இவ்ளோ எதிர்ப்புக்கு காரணம். இதனால அவங்க சொன்ன கருத்து கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக கருத்துகள் எதிரா இருக்குனு வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துருக்காங்க.

இது ஒருபக்கம் இருக்கும்போது நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்று நீதிபதிகளாக பதவி ஏத்துக்கிட்டாங்க. எப்போதும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியானால் சம்பிரதாயமா வழக்கறிஞர்கள் வரவரேற்பார்கள் எந்த வித சர்ச்சையும் இல்லாமல் பதவியேற்பு நடைபெறும். ஆனால் இந்த முறை ஒரே ஒரு நீதிபதிக்கு பெயருக்கு மட்டும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் வேற இறங்கிட்டாங்க.

ஆனா 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இருந்து நீதிபதியாக ஆகுறாங்க, இதற்கு முன்னாடி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழங்கறிஞர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் மதம் மற்றும் அரசியல் சார்பின்றி நியாயமாகத் தங்களது சட்டப் வேலையை சரியா செஞ்சுருக்காங்க. அவர்களைப் போல விக்டோரியாவும் கண்டிப்பா சிறப்பாக பணியாற்றுவாங்க அப்டின்னு விக்டோரியா கவுரிக்கு ஆதரவாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் கொலிஜயத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இப்படிப்பட்ட நிலைலதான் தான் விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவி ஏற்பதை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க முடியாது அப்டின்னு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு சொல்லி வழக்கை தள்ளுபடி பண்ணிட்டாங்க. இப்ப பிரிவினைவாதியெல்லாம் என்ன பண்றதுனேன்னு தெரியாம முழிக்குறாங்க. 

Similar News