'போதும்ப்பா என்னால இனி முடியாது' - பாஜகவை எதிர்க்க முடியாமல் அரசியலில் இருந்து விலகும் சோனியா காந்தி!

Update: 2023-02-27 02:36 GMT

'போதும்பா இனிமே என்னால பிஜேபி கூட போராட முடியாது' என கையெழுத்து கும்பிடும் விதமாக சோனியா காந்தி ஒதுங்கிய விவகாரம் காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் மத்திய அரசு பதவியில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தது காங்கிரஸ், இப்படி அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தாலும் காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், சுரேஷ் கால் மாடி விவகாரம், தொழிலதிபர்களுக்கு மொத்தமாக பணத்தை வாரி வழங்குதல் இதுபோன்ற பல்வேறு ஊழல்களை சந்தித்த காரணத்தினால் காங்கிரஸ் கட்சி சரிய துவங்கியது.

இந்த நிலையில் 2014 இல் பிரதமர் மோடி பதவி ஏற்றார், பதவியேற்றது முதல் பாஜகவிற்கு ஏறுமுகம்தான், ஆட்சிக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியும் பாஜக இன்றும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது. மேலும் வரும் 2024 ஆம் தேர்தலில் கூட பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போதே கூறி வருகின்றன.

ஒரு காலத்தில் இந்தியாவையே கட்டி ஆண்ட காங்கிரஸ் கட்சி தற்போது மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க கூட தலைகீழ் நின்று தண்ணீர் குடிக்க அவல நிலையில் வேண்டி உள்ளது. இது இவ்வாறு இருக்கையில் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்த காங்கிரஸ் மிகவும் தேய்ந்து, தேய்ந்து தற்போது தலைவர் பதவிக்கு ஆள் இல்லாத மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வரலாற்றில் முதல்முறையாக நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கும் அளவிற்கு போனது காங்கிரஸ் கட்சியின் தேய்மானம்.

இப்படி தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து வருவதாலும், வரிசையாக இறங்குமுகமாக இருப்பதாலும் இனி நேரு குடும்பத்தில் குறிப்பாக சோனியா காந்தியின் தலைமை வேலைக்காகாது என காங்கிரஸ் தலைவர்களை வெளிப்படையாக பேச துவங்கியுள்ளனர். இதனை உணர்த்துக் கொண்ட சோனியா காந்தி தற்பொழுது தீவிர அரசியலில் இருந்து விலகும் முடிவையும் எடுத்துள்ளார்.

'இந்திய ஒற்றுமை யாத்திரையுடன் எனது காங்கிரஸ் தலைவர் பதவிக்கால முடிந்ததின் மகிழ்ச்சி அடைகிறேன்' என கூறிய அவர் தீவிர அரசியலில் இருந்தும் விலகுவதாக விரைவில் அறிவிக்கப் போவதாக தெரிகிறது. பாஜக வெகு வலுவாக இருப்பதாலும், காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த கட்ட தலைவர்கள் வழியமையாக இயலாத காரணத்தினாலும், காங்கிரஸ் கட்சிக்கு செலவழிக்க நிதி இல்லாத காரணத்தினாலும், வயது மூப்பின் காரணமாக இனி இந்தியா முழுவதும் சோனியாவால் பிரச்சாரமோ, சுற்றுப்பயணமோ செல்ல முடியாத காரணத்தினாலும் சோனியா காந்தி இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த 15 ஆண்டுகளாக ராகுல் காந்தியை இந்தியாவின் இளம் தலைவர் என்ற பிம்பத்தை கட்டமைக்க முயன்று அதில் வரிசையாக தோல்வியடைந்த காரணமும் சோனியாவிற்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வலுவான பாஜகவை எதிர்க்க ராகுலின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள் நிச்சயம் கைகொடுக்காது என்று சோனியா காந்தி நன்கு உணர்ந்த காரணத்தினாலேயே இந்த தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, 'இந்த நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் சவாலான நேரம். பிரதமர் மோடியும் பாஜகவும் எல்லா அமைப்புகளையும் கைப்பற்றி வருகின்றனர். கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கிற மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் இலக்கை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் செல்ல வேண்டும், இன்றைய அரசை மிக தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். இந்திய ஒற்றுமை பயணத்துடன் காங்கிரஸ் தலைவராக எனது பதவிக்காலம் முடிந்ததை நான் மகிழ்ச்சி அடைகிறேன்' என சோனியா காந்தி வெறுத்து கூறியது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சோனியா காந்தி தீவிர அரசியலில் இல்லை, ராகுல் காந்தியின் செயல்பாடுகளும் அவ்வப்போது தோல்வியை சந்தித்து வருவதால் காங்கிரசுக்கு தலைவரே இல்லாமல் இருக்கும் காரணத்தினால் தற்போது ஏற்கனவே அணியணியாக பிரிந்து இருக்கும் காங்கிரஸ் இன்னும் பல அணிகளாக உடைய வாய்ப்புகள் இருப்பதாகவே அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றர். இப்படியே சென்றால் அடுத்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அளவிற்கு சென்றுவிடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Similar News