ஐயா ப்ளாக் ஷீப் சேனல் ரெய்டுல என்னை கோர்த்துவிடாதீங்க - டெல்லியில் பம்மிய உதயநிதி!
உதயநிதி உறவினர் பிளாக் ஷீப் தொலைக்காட்சிக்கு பொருள்கள் வாங்கியதில் நடந்த முறைகளை தொடர்பாக தொடரப்பட்ட ரைடு நடவடிக்கையில் சமாதானம் செய்வதற்க்கே டெல்லி சென்றுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அமைச்சர் உதயநிதி கடந்த இரு நாட்களாக டெல்லிக்கு சென்றார், அங்கை தங்கி பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்தார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஸ்ரீகிரிராஜ் சிங்கை இப்படி பிரதமர் மற்றும் முக்கிய 2 அமைச்சர்கள் சந்தித்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்திக்க நினைத்து அது நடக்கவில்லை எனவும் தெரிகிறது. இந்த நிலையில் அதற்கு பிண்ணனியில் உள்ள பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சொந்தமானது கலைஞர் தொலைக்காட்சி, இந்த கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு பிரிவு சித்திரம் டிவி. இந்த சித்திரம் டிவியை பிளாக் ஷீப் என்ற யூ ட்யூப் சேனல் தற்பொழுது எடுத்து நடத்த துவங்கியது. அந்த பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் உதயநிதி அவர்களின் உறவினர் மகன் கார்த்திக் மற்றும் பிளாக் ஷீப் விக்னேஷ் ஆகிய இருவரிம் பங்குதாரர் என்ற அடிப்படையில் துவங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அந்த கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிளாக் ஷீப் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து ரெய்டு தொடங்கியது. அந்த ரெய்டில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன எனவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் பிளாக் ஷீப் டிவிக்கு உபகரணங்கள் வாங்கியதில் வரிவிதிப்பு செய்தது மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடத்தியதில் முறைகேடு நடந்தது போன்ற பல்வேறு ஆவணங்கள் பிடிபட்டது.