கொடுத்தது என்னவோ வெங்கடாஜலபதி படம், ஆனால் பெரியார் மண் என தம்பட்டம் அடிக்கும் திமுக

Update: 2023-03-03 07:21 GMT

கொடுத்தது காசு, போட்டது பிரியாணி ஆனால் திமுக தம்பட்டம் அடித்துக் கொள்வது என்னவோ 'பெரியார் மண்ணில் பெற்ற வெற்றி' என.

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை விட பணநாயகமே வென்றுள்ளது என பெரும்பாலான கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா வின் தந்தையான இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மீண்டும் திமுக கூட்டணியில் சீட்டு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கூட்டணியே போட்டியிட்டாலும் வேலை செய்தது என்னவோ திமுக கட்சியினர்தான், ஆனால் காங்கிரஸ் கட்சியினர் வெளியில் எட்டிக் கூட பார்க்கவில்லை.

திமுக வேலை செய்தது என்றால் எப்படி வேலை செய்தது? என கடந்த 15 நாட்களாக ஈரோடு கிழக்கு தேர்தலில் நடைபெற்ற பிரச்சாரத்தை பார்த்தால் என்ன நடந்தது என பளிச்சுன்னு தெரியும். மக்களை கும்பலாகக் பட்டியல் அடைத்து வைப்பது, எதிர்க்கட்சியினர் வந்து எங்கே திமுகவின் ஆட்சி அவலங்களை மக்களிடத்தில் எடுத்து கூறிவிடுவார்களோ என்ன பயந்து மக்களை மணடபத்தில் அடைத்து வைப்பது, ஒரு நாளைக்கு 500 ரூபாய் அப்டின்னு பத்து நாளைக்கு மக்களை கொண்டு அடைத்து வைத்துவிட்டு காலை மதியம் மாலை என மூன்று வேளையும் அசைவ சாப்பாடு கொடுப்பது. இது போதாது என்று வெள்ளி கொலுசு, பட்டுப்புடவை, ஸ்மார்ட் வாட்ச், குக்கர் என அனைத்து பொருட்களையும் வாரி இறங்கியது இப்படி எல்லாம் இறக்கிவிட்டு மேலும் தேர்தல் நடக்கும் இரண்டு நாளைக்கு முன்பு நாங்கள் குடும்பத்தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் தரவில்லை என எப்போது கூறினோம், கண்டிப்பாக தருவோம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடனே அது பற்றி அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் சென்று பிரச்சாரம் செய்தனர்.

போதாக்குறைக்கு திமுகவின் மூத்த அமைச்சர்கள் அங்கு முகாமிட்டனர் எல்லாவற்றிற்கும் மேலாக 'கரூர் கம்பெனி' கட்டியாலும் செந்தில் பாலாஜி கூட அங்கு முகாமிட்டார். இதன் விளைவாக திமுகவின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தற்போது வெற்றி பெற்றுள்ளார். ஆனால் 250 கோடி ரூபாயை வாரி இறைத்துவிட்டு பணநாயகமாக தேர்தலை மாற்றிவிட்டு தற்பொழுது திமுக கூறுவது என்ற வென்றால் 'ஈரோடு பெரியார் மண்' அதனால் ஜெயித்துள்ளது என.

திமுகவின் ராஜிவ் காந்தி ஈரோடு கிழக்கு குறித்து தனது ட்விட்டர் பதிவில், 'பெரியார் மண்! அடிமைகளையும், மதவாதிகளையும், குடிதேஷ் கோமாளிகளையும், விரட்டி அடித்து வீழ்த்தி இருக்கிறது. தலைவர் முக ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் மாட்சிக்கு ஈரோடு சாட்சி' என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பதிவு வெளியிட்டுள்ளார்

கொடுத்தது என்னவோ வெங்கடாஜலபதி படம், ஓட்டு கேட்டது என்னவோ பணத்தை வைத்து ஆனால் பெரியார் மண் என தற்பொழுது திமுக தம்பட்டம் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இப்படி பெரியார் என்று கூறினால் பெரியாரை காண்பித்து ஓட்டு கேட்க வேண்டியதானே அப்புறம் எதுக்கு வெங்கடாஜலபதி என இப்போது அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு அங்கிருந்து வெளியேறினார். அங்கிருந்து வெளியேறும் போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது என்று கூறிக்கொண்டே வெளியேறினார்.

மேலும் திமுக கூட்டணி வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றதை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் லட்டு கொடுத்து கொண்டாடினார், அந்த கொண்டாட்டத்தில் கூட எழுந்து நின்று கூட இனிப்புகள் கொடுக்காமல் இருந்தது அரசியல் ரீதியாக விமர்சனங்களை எழுப்பியுள்ளது. பிரச்சாரத்திற்குத்தான் செல்லவில்லை ஆனால் வெற்றி பெற்றதிற்கு கூடவா இனிப்பு எழுந்து நின்று குடுக்க முடியாது என விமர்சனம் எழுந்துள்ளது.

Similar News