கைக்குள் வந்தது திரிபுரா, நாகாலாந்து - அடுத்து தமிழகம்தான், அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்!

Update: 2023-03-03 07:21 GMT

இடதுசாரிகள் ஆதிக்கத்தை வீழ்த்தி விட்டு, காங்கிரசை அகற்றிவிட்டு திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக வெற்றியை சூடியுள்ளது.

வட இந்தியாவில் குறிப்பாக இடதுசாரிகள், நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களை தற்போது பாஜக கைப்பற்றி உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஜக அங்கு ஆட்சியில் வரும் என யாருக்கும் தெரியாது. இவ்வளவு ஏன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஜக அங்கு ஆட்சிக்கு வரும் எனக் கூறியிருந்தால் அனைவரும் சிரித்திருப்பார்கள். ஆனால் இன்றைய நிலையே தலைகீழ் அங்கிருந்து இடதுசாரிகளின் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட காங்கிரஸ் மாநிலத்தில் இல்லாத நிலைமைக்கு சென்றுள்ளது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது. நடந்து முடிந்த திரிபுரா மாநில தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை அகற்றிவிட்டு, கடந்த 2019ம் ஆண்டு 36 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது 34 இடங்களை கைப்பற்றி மீண்டும் பாஜக சாதனை படைத்துள்ளது.

நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்ததில் வாக்குகள் எண்ணப்பட்டு 39 இடங்களை கைப்பற்றி பாஜக-என்டிபிபி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம், குறிப்பாக மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தவிடாமலே போராட்டம் செய்துவந்த நக்ஸல்களை ஒடுக்கி பாஜக மக்களை கவர்ந்துள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் பாஜக பெருவாரியான வாக்குகளை பெற்று சரித்திரம் படைத்துள்ளது.

நாகாலாந்தில் ஒரு காலத்தில் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சி இப்போது மக்களால் துடைத்து எறியப்பட்டுள்ளது. நாகாலாந்தில் கடந்த 1993 முதல் 2003 வரை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்கள் முடித்த கையோடு இனி தென்னிந்தியாதான் என கர்நாடகா மற்றும் தமிழகத்தை நோக்கி பாஜகவின் அடுத்த குறியாக அமித்ஷா திட்டமிட்டுவருகிறார். வரும் காலங்களில் தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது சட்டமன்ற தேர்தலுக்கு மேலிட பார்வையாக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையினால் தமிழகத்தில் எப்படியாவது 39 தொகுதியில் 25 தொகுதிகளை பாஜக அள்ளிவிட வேண்டும் என மாஸ்டர் பிளானுடன் களமிறங்குகிறது பாஜக.

இது நாள் வரையில் தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் அமித்ஷாவின் மொத்த நோக்கமும் இருந்ததால் அந்த மாநிலங்களில் வெற்றியை பறித்து விட்டது பாஜக, அடுத்து கர்நாடகாம், தமிழகம் தான் என அமித்ஷாவின் பார்வை திரும்பியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அடுத்த கட்ட வேலைகளை பாஜக தலைமை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News