முதல்வர் ஸ்டாலினை சூப்பர் ஹீரோ போல் ஊடகத்தில் காட்ட திமுக செய்த பித்தலாட்டம் அம்பலம்!

Update: 2023-03-05 12:53 GMT

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் திராவிட மாடல் இல்லையென்றால் தமிழ்நாடு இல்லை என்ற மாய பிம்பம் தமிழகத்தில் கட்டமைக்கப்படுகிறது என்ற பரபர தகவல்கள் கிடைத்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்தது, அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான்! முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக ஆசைப்பட்டு இறுதிவரை அவரால் முதல்வர் பதவியை எட்ட முடியாமல் போனது. 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி என்ற நிலையில் திமுக இருந்து வந்தது, இன்னும் ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சியாக இருந்தால் தமிழகத்தில் திமுக இனி தலை எடுக்கவே முடியாது என உணர்ந்த திமுகவினர் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என 505 வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

மேலும் பிரசாத் கிஷோர் என்ற தேர்தல் நிபுணருக்கு கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்து தேர்தல் வியூகத்தை வகுத்தார்கள். அந்த வியூகமானது தமிழகமெங்கும் 'ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு' என்கின்ற ரீதியில் விளம்பரங்களை அள்ளி தெளித்தது, மீடியாக்களில் கோடிகளை கொட்டி விளம்பரம் செய்தது. மக்களிடம் மனுக்களை பெற்று 100 நாட்களில் உங்களுக்கு அனைத்தையும் செய்து தருகிறோம் எனக்கொரு ஊர் ஊராகப் பெட்டியை தூக்கிக் கொண்டு அலைந்தார்கள் திமுகவினர். ஆனால் அந்த வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என தெரியவில்லை, 100 நாட்களில் செய்து தருவோம் என கூறி வாங்கிய மனுக்களின் நிலை இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் என்ன ஆனது என தெரியவில்லை.

அரசு ஊழியர்களுக்கு நாங்கள் தான் உங்கள் விடிவெள்ளி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு விடிவு காலம் பிறந்து விடுவோம் என அரசு ஊழியர்களை நம்ப வைத்தார்கள், குடும்பத் தலைவிகளை மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் நீங்கள் வேலை எதுவும் செய்ய வேண்டாம் அது உங்களின் உரிமைத்தொகை எனக் கூறி நம்ப வைத்தார்கள், இயற்கை வளங்களுக்கு நாங்கள்தான் ஆதரவு இயற்கை வளங்களை பாதுகாக்க எங்களை விட்டால் ஆள் கிடையாது மற்ற கட்சியினர் ஆட்சிக்கு வந்தால் சுரண்டி விடுவார்கள் என கூறி சுற்றுப்புற சூழல் என்று அணியை உருவாக்கி இயற்கை ஆர்வலர்களை நம்ப வைத்தார்கள், மாணவர்களுக்கு நாங்கள் தான் மாணவர்களுக்கு எங்களை விட்டால் வேறு வழியில்லை என்று கூறி மாணவர் அணியை வைத்து ஊர் முழுவதும் பிரச்சாரம் செய்தார்கள், போதாக்குறைக்கு இணையதளங்களில் ஸ்டாலின் இன்றி தமிழகம் விடியாது ஸ்டாலின் தான் எல்லாமே எனக் கூறி நம்ப வைத்தார்கள்!

இது எல்லாம் நடந்து விட்டது இனி ஏதோ ஒன்று குறை இருக்கிறது என்ற நிலையில் 'ஆம் இந்துக்கள் வாக்கு வங்கி' அவற்றையும் கவர்ந்தாக வேண்டும் என்ன செய்வது எனக் கூறி முருகனின் வேலை கையில் எடுத்துக்கொண்டு சிரித்த மேனிக்கு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார்கள். இறுதியில் இவ்வளவு முயன்றும் சொற்ப வாக்கு வித்தியாசங்களில் மட்டுமே திமுகவால் ஜெயிக்க முடிந்தது.

இது ஒரு புறம் இருக்க ஆட்சிக்கு வந்தாகிவிட்டது சொன்னதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனாலும் திராவிட மாடல் இல்லை என்றால் தமிழகம் இல்லை என்று நிலையை மக்கள் மத்தியில் புரிய வைக்க வேண்டுமே என்பதற்காகவும், எங்களை விட்டால் தமிழக மக்களுக்கு வேற வழி கிடையாது என நம்ப வைப்பதற்காக தற்போது மீண்டும் கோடிகளில் செலவு செய்ய திமுக இறங்கி விட்டது என்ற தகவல் கிடைத்துள்ளது.

சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பதிவில் இது பற்றிய உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார். சவுக்கு சங்கரின் ட்விட்டர் பதிவில் வா மணிகண்டன் என்பவரின் படத்தை பதிவிட்டு 'இவர்தான் திராவிட மாடல் உருட்டுகளின் சூத்திரதாரி, திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் உருட்டும் உருட்டுக்குகளுக்கு இவர்தான் சூத்திரதாரி கவிஞர் வா மணிகண்டன், அரசின் பப்ளிசிட்டி மீடியா விவரங்களை பார்த்து வருகிறார். உதயசந்திரன் மற்றும் டேவிட்சன்னோடு தினமும் உரையாடி வருகிறார். தினமும் ஊடகங்களில் திராவிட மாடலுக்கு ஆதரவாகவும், திராவிடம் மாடல் அரசியல் இல்லை என்றால் தமிழகமே அழிந்துவிடும் என்ற பிம்பத்தை கட்டமைப்பது தான் இவரது பணி முழு நேர திராவிடம் ஆனால் பிஆர்ஓவாக செயல்பட்டு வருகிறார்' என இவரை பற்றி குறிப்பிடுகின்றார்.

மேலும் இவரைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளதாவது இவர்தான் தமிழக அரசு நடத்தும் விஷயங்களை கூறுவதை விட முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் இல்லை என்றால் தமிழகமில்லை என கூறும் செய்திகளையும், கட்டுரைகளையும் பரப்புவது தான் இவரது வேலை! ஊடகங்களில் முதல்வர் ஸ்டாலின் குறித்த செய்திகள் வர வேண்டும் என்றால் அதில் பாசிட்டிவ்வான விஷயங்கள் வரவேண்டும் நெகட்டிவ்வான விஷயங்கள் வரக்கூடாது என பார்த்துக் கொள்வது தான் இவரது வேலை! குறிப்பாக ஸ்டாலின் ஒரு இடத்திற்கு சென்று செல்ஃபி எடுக்கிறார் என்றால் அது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக வெளிவரும், அதே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், முதியோர் ஓய்வுத் தொகை கேட்பவர்கள் பென்ஷன் கேட்பவர்கள் போராடினார்கள் என்றால் அது ஊடகங்களில் வெளிவராது இப்படி திறமையாக பார்த்துக் கொள்வது தான் இவரது வேலை என்ற தகவல் கிடைத்துள்ளது.

கோடிகளை கொட்டி ஆட்சியைப் பிடித்து திமுக அரசு தற்போது மீண்டும் கோடிகளைக் கொட்டி அந்த ஆட்சியை தக்க வைக்க பல்வேறு பித்தலாட்டங்களை செய்து வருவது இதன் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.

Similar News