வட இந்திய தொழிலார்கள் விவகாரத்தை நைசாக பாஜக பக்கம் திருப்ப தி.மு.க சதி - பரபர தகவல்கள்!
வட இந்திய தொழிலாளர்கள் மீதான விவகாரத்தை பாஜக மீது இருப்ப திமுக நிர்வாகி முயற்சி செய்தது அம்பலம் ஆகியுள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் வட இந்திய தொழிலாளர்கள் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக உணவகம், கட்டிட வேலை, மருந்தகம், சமைக்க, சுத்தம் செய்ய, தோட்டவேலை, பல்பொருள் விற்பனையகங்களில் வேலை என பல்வேறு இடங்களில் வட இந்தியர்கள் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி வேலை செய்கின்றனர்.
அதற்கு பல காரணங்கள் உள்ளன, வட இந்தியாவில் வேலை வாய்ப்புகள் குறிப்பாக அவர்கள் வாழும் மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும், தமிழகத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை நிறைவாக இருப்பதாலும் கொஞ்சம் கொஞ்சமாக வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை நம்பி இங்கு வேலைக்கு வருகின்றனர்.
ஒரு வட மாநில தொழிலாளி ஒரு வாரம் முழுவதும் தமிழகத்தில் வேலை பார்த்தால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வீதம் ஒரு வாரத்திற்கு 3500 அவரால் சம்பாதிக்க முடியும், இதே அவரது மாநிலத்தில் வேலை பார்த்தால் 1000 ரூபாய் 1500 ரூபாய் வரைதான் சம்பாதிக்க முடியும் இப்படி அவரது வருமானத்தை எண்ணி இங்கு தமிழ்நாடு வந்து வேலைக்கு வந்துள்ளார்கள். மேலும் தமிழ்நாட்டில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதும், வேலைக்கு அதிகமாக ஊதியம் கேட்பதும் பெருகி வருவதால் வட மாநில தொழிலாளர்கள் அந்த வேலைக்கு நியமிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஒரு நாளைக்கு கட்டிட வேலைக்குச் செல்லும் ஒரு ஆள் தமிழர் என்றல் அவர் கேட்கும் ஊதியம் தோராயமாக 1200 ரூபாய், வட மாநில தொழிலாளர்கள் 500 ரூபாய்க்கு என இரண்டு பேரை வைத்து அந்த வேலையை செய்ய முடியும்! இதன் காரணமாகவே வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் நிறைந்துள்ளார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் கலவரம் குறித்து வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதால் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் வட மாநில தொழிலாளர்களை பற்றியும், அவர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்கள் வேலையை பறிப்பதாகவும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தால் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்தது.