பேனா வைக்க துடிக்கும் திராவிட மாடல், கல்லணையை புகழ்ந்த தேசிய மாடல் - தமிழகத்தை கௌரவப்படுத்திய மோடி!

Update: 2023-03-05 12:59 GMT

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு கடலுக்கு நடுவே எதனை அடி உயரத்தில் பேனா வைக்கலாம் என திராவிடம் மாடல் அரசு யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழர்களின் திறமையான கல்லணையை பற்றி உலகமே அறியும் வகையில் பேசி பெருமை படுத்தி உள்ளார் பிரதமர் மோடி.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து எப்படியாவது மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவுச் சின்னமாக பேனா சின்னம் அமைத்திட வேண்டும் என முடிவு கட்டி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை மெரினா கடற்கரையிலிருந்து கடலுக்குள் சுமார் 360 மீட்டர் தள்ளி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படவிருப்பதாக அறிவித்தது திமுக அரசு. இதற்காக, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்த அரசு, அதற்காகச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, இடர் மதிப்பீடு மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட திட்ட அறிக்கைகளையும் சமர்ப்பித்தது.

எனினும், மக்களின் கருத்துகளைக் கேட்காமல் திட்டத்தைத் தொடங்கக் கூடாது எனத் தெரிவித்துவிட்டது மத்திய கடல்சார் ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம். இதற்காக கருத்துகேட்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது, இந்த கருத்துகேட்பு கூட்டத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு இருந்தபிறகும் திமுக அரசு கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிட்டு வருகிறது.

இப்படி மறைந்த பழம்பெரும் மன்னர்கள் கட்டிய பெருமையை பராமரிப்பதை விட்டுவிட்டு மறைந்த திமுக தலைவருக்கு பேனா வைத்து பெருமையை ஏற்படுத்த நினைப்பதை இணைத்து தமிழகம் முழுவதும் அதிர்வலைகள் கிளம்பிய நிலையில் இந்த நிலையில் தமிழக ஆட்சியாளர்களே பெருமை பேசிய தவறிய கல்லணையை பற்றி குறிப்பிட்டு பேசியது தமிழர்களை பெருமைப்படுத்தியுள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு தொடர்பான பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் பேசினார், அப்போது பேசிய பிரதமர் மோடி, 'தஞ்சாவூர் மாவட்டத்தில் சோழர்கள் கட்டிய கல்லணை 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த அணை இப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தால் வியந்து போவீர்கள். கல்லணை இன்னும் மக்களுக்கு செழிப்பை அளித்து வருகிறது' என பெருமையுடன் குறிப்பிட்டார்.

கல்லணை இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணை, இந்த அணை கரிகால் சோழனால் முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்ட அணை. 2000 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் அணை! இது திருச்சிக்கு மிக அருகில் தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த அணையைத்தான் பிரதமர் மோடி கௌரவமாக பேசியுள்ளார்.

தமிழர்களின் கட்டடக்கலை, தமிழர்களின் பண்பாடு, தமிழர்களின் நாகரீகம் என தமிழர் பெருமையை மேடைக்கு மேடை பேசி வரும் திராவிட ஆட்சியாளர்கள் தமிழர் பெருமையை பறைசாற்றும் நினைவுச் சின்னங்களையும் தமிழர் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கவும், பராமரிக்கவும் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கும்போது பிரதமர் மோடி சமயம் கிடைக்கும்போது தமிழர்களின் பெருமையை உலகம் அறியும் வகையில் பேசுவது குறிப்பிடத்தக்கது.

Similar News