திமுக கூட்டணியில் இருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய குழி தோண்டும் திருமாவளவன் - பரபர தகவல்கள்

Update: 2023-03-09 14:24 GMT

மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் விஜயகாந்த் அரசியல் வாழ்க்கையை வீழ்த்தி இன்று தேமுதிக என்ற கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்தது போல் முதல்வர் ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு அனுப்பி அவரது வீழ்ச்சியை துவக்கி வைக்கும் வேலையை துவங்கியுள்ளார் திருமாவளவன்.

2006ம் ஆண்டில் தேர்தலில் முதன்முதலில் களமிறங்கிய விஜயகாந்த்தின் தேமுதிக மக்களிடத்தில் ஆதரவு பெற்ற காரணத்தினால் 10 சதவீத வாக்குகளை வாங்கிய தமிழக அரசியலில் சாதனை படைத்தது அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. ஏனெனில் அதுவரையில் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிதாக துவங்கப்பட்ட கட்சி இந்த அளவிற்கு வாக்குகளை வாங்கியதில்லை, அதற்கு முன் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து விலகிதான் புதிதாக கட்சி துவங்கினர்.

மக்கள் விஜயகாந்த்துக்கு வழங்கிய இந்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனை தொடர்ந்து 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற விஜயகாந்த் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 10.3 சதவீதம். அதனை தொடர்ந்து 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை தேமுதிக பெற்றது. கட்சி துவங்கி 5 ஆண்டுகளில் எதிர்கட்சி தலைவர் என்ற பதவியில் அமர்ந்தார் விஜயகாந்த். இப்படி அசுர வளர்ச்சியில் இருந்த விஜயகாந்த் கட்சிக்கு இறங்குமுகம் மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் திருமாவளவன், வைகோ மூலமாக வந்தது.

2016 சட்டசபை தேர்தலில் மாற்று என்ற கோஷத்தை மக்கள் நல கூட்டணி முன்வைத்தது. இதற்கு விஜயகாந்த்தையும் முதல்வர் ஆசை காட்டி அழைத்து வந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், மதிமுக'வின் வைகோ விஜயகாந்த் அடுத்த தமிழக முதல்வர் என விஜயகாந்த் வீட்டிற்க்கே சென்று அவரது மனைவி பிரேமலதாவிடம் ஆசை காட்டி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர். தேமுதிகவின் தலைமையில் 'மக்கள் நல கூட்டணி' என பெயர் வைத்து கம்யூனிஸ்ட் காட்சிகளை வேறு இழுத்தது. இதற்கு திருமாவளவன் முக்கிய காரணம். விளைவாக 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி மக்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு 5 சதவிகித வாக்குகளே வாங்க முடிந்தது. அதன் பிறகு தேமுதிகவிற்கு இறங்குமுகம்தான். விஜயகாந்த் அவர்களுக்கு முதல்வர் ஆசை காண்பித்து மக்கள் நல கூட்டணி அமைத்து அவரது அரசியல் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் திருமாவளவன்.

இந்த நிலையில் திருமாவளவன் கடந்த சில நாட்களாக திமுக கூட்டணியில் வேண்டா வெறுப்பாக இருந்து வருகிறார், எப்படி விஜயகாந்தை மக்கள் நல கூட்டணிக்கு நீங்கள் தான் முதல்வர் எனக் கூறியபடி அழைத்துச் சென்று தேமுதிக கட்சியை ஒன்றும் இல்லாமல் செய்தாரோ அதே போல் அடுத்த படியாக திமுகவை ஒன்றுமில்லாமல் ஆக்க வேண்டும் என திருமாவளவன் முயற்சி செய்து வருகிறார். இதன் காரணமாக தேசிய அரசியலுக்கு முதல்வர் ஸ்டாலினை நீங்கள் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்

நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200வது நிறைவுவிழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, 'நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ளது. இப்போதே பாஜகவினர் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டில் தொடங்கி விட்டார்கள். ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட மாநில பயணம் மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக சக்திகளை எல்லாம் சந்தித்து பேச வேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் உசுப்பேற்றி! உசுப்பேற்றி! விஜயகாந்த் அவர்களை இறங்குமுகத்தை சந்திக்க வைத்தது மட்டுமல்லாமல் சுத்தமாக துடைத்து என்று தேமுதிக கட்சி ஒரு சதவீத வாக்கு கூட வாங்குவதற்கு கூட முடியாமல் நிற்கும் நிலைக்கு இழுத்துச் செல்ல முதல் காரணமாக இருந்த திருமாவளவன் தற்பொழுது முதல்வர் ஸ்டாலினை அது போல் இழுக்க பார்க்கிறார். இப்பொழுது உள்ள நிலைமையில் இரண்டு மூன்று மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளே தேசிய அரசியலில் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் போன்ற கட்சியே வலுவாக இல்லாமல் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டை இதுவரை தாண்டிராத திமுகவை தேசிய அரசியலுக்கு செல்லுங்கள்! தேசிய அரசியலுக்கு செல்லுங்கள்! என வலுக்கட்டாயமாக தள்ளுவது முதல்வர் ஸ்டாலினை அடுத்த விஜயகாந்தாக்க திருமாவளவன் திட்டம் போட்டு வருவது போல் தெரிகிறது.

Similar News