அய்யோ போச்சே! போச்சே! - டெல்லியில் இருந்து வந்த தகவலால் தலையில் அடித்துக்கொண்டு கதறும் திருமாவளவன்!

Update: 2023-03-10 07:28 GMT

'இவர்கள் பிரிய வாய்ப்பே இல்லை, நமக்கு திமுக கூட்டணியை விட்டால் வேறு வழி இல்லை' என அதிமுக கூட்டணியில் சேர திட்டமிட்ட திருமாவளவன் தற்பொழுது விரக்தியில் உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் தற்பொழுது திமுக கூட்டணியில் எம்.பி ஆக இருக்கிறார், மேலும் இன்னும் ஒரு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் எப்படியாவது திமுக கூட்டணியில் இருந்து விலகிவிட வேண்டும் என்பது திருமாவளவனின் தீர்க்கமாக எண்ணமாக இருந்தது. காரணம் இன்னும் காங்கிரஸ் தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவாகவில்லை, மேலும் காங்கிரஸ் கட்சி தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் ஜெயிக்கும் நம்பிக்கையும் இல்லை. திமுகவும் அதிக அதிருப்தியை மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருப்பதால் எப்படியும் இந்த முறை தனக்கு எம்.பி சீட்டு கிடைத்தாலும் ஜெயிக்கப் போவதுமில்லை, அதேபோல் வழக்கமான நமது சிதம்பரம் தொகுதியை நமக்கு திரும்ப கிடைத்தாலும் கண்டிப்பாக நம்மை பாஜக போன்ற வலதுசாரிகள் ஜெயிக்க வைக்க போவதில்லை என முடிவெடுத்த திருமாவளவன் எப்படியாவது திமுக கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டு வந்து அதிமுக கூட்டணியில் இணைந்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

இதன் காரணமாகவே திமுகவை மறைமுகமாக எதிர்த்து அவ்வப்போது கருத்துக்கள் கூறி வந்தார். மேலும் பாஜகவிற்கு சவால் விடுவதாக கூறிக்கொண்டு 'பதவி என் தலை முடிக்கு சமம்' என மறைமுகமாக சவால் விட்டார். இப்படி மறைமுகமாக திமுகவை எதிர்த்து விட்டு மறுபுறம் அதிமுக கூட்டணியில் இணைய சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்தார் திருமாவளவன். அதன் ஒரு பகுதியாக இரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து செய்தி தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளியிட்டார். இப்படி திமுக கூட்டணிகள் இருந்து எப்பொழுது கழன்று விடலாம் என சமயம் பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.

மேலும் வரும் 2024 தேர்தலை மையமாக வைத்து அதிமுக கூட்டணியில் எப்போது இணையலாம் என சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த திருமாவளவனுக்கு தற்பொழுது அதிமுக பாஜக இடையே உருவான சண்டை சந்தோஷத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் திருமாவளவனுக்கு சிலர் அளித்த தகவலின் பெயரில் 'அதிமுக பாஜக சண்டை என்பது தற்காலிகமானது, அவர்கள் இன்று உரசி கொள்வார்கள் நாளை சேர்ந்து கொள்வார்கள்! மேலும் பாஜக கட்சி கூட்டணி முடிவுகளை மேலே இருந்து எடுக்கிறது எனவே மேலிருந்து டெல்லி மேலிடத்திலிருந்து எடப்பாடி அவர்களுக்கு ஒரு போன் அடித்து இதெல்லாம் எதுவும் வேண்டாம் அமைதியாக கூட்டணியை கவனித்துக் கொள்ளுங்கள்' என கூறினால் கண்டிப்பாக எடப்பாடி அதனை கேட்பதை தவிர வேற வழியில்லை எனவே இப்படி தற்காலிக பிரச்சனைக்கு நாம் சந்தோஷப்படுவது வீணானது என திருமாவளவனிடம் தெரிந்து கொண்டார்.

இதுவே நாம் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அது நடக்கப் போவதில்லை என திருமாவளவனுக்கு டெல்லியில் இருந்து செய்தி கிடைத்துள்ளதாம். இதனை தொடர்ந்து இனிமே நமக்கு திமுக கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை என திருமாவளவன் முடிவெடுத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது திமுக கூட்டணியே சிறந்தது என்று ரீதியில் பேசி உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பத்திரிக்கையாளரிடம் அளித்த நேர்காணல் ஒன்றில், 'தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைவது அரசியல் தலைகீழாக நடக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது' என கூறியுள்ளார். தொடர்ந்து விசிக-அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக திருமவளவனிடம் அந்த பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியதற்கு, 'திமுக கூட்டணியில் விசிக நல்லணிக்கத்தோடு இருக்கிறோம். எந்த உரசலும் இல்லை. திமுக கூட்டணியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் விசிக வலுவாக இருக்கிறோம்' என திருமாவளவன் குறிப்பிட்டார்.

'எனக்கு உன்ன விட்டா வேற ஆள் கிடையாது உனக்கும் என்னை விட்டால் வேறு ஆள் கிடையாது' என திருமாவளவன் தற்பொழுது திமுக கூட்டணியிடம் சரணடைந்த விவகாரம் அரசியல் ரீதியாக பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது

Similar News