'அமைச்சர்களே கோடிகளை குவிக்க வேண்டும்!' - தேர்தல் வசூலை துவங்கும் திமுக, பரபர ரிப்போர்ட்!

Update: 2023-03-10 13:01 GMT

'அமைச்சர்களே தேர்தல் வந்துவிட்டது ஆரம்பியுங்கள் வசூலை' என அறிவாலயம் மறைமுக உத்தரவை திமுக அமைச்சர்களுக்கு பிறப்பித்துள்ளது.

திமுகவின் அமைச்சர்களுக்கு இன்னும் 12 மாதங்களில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ரகசிய வேலை கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்த்த முழு வீச்சுடன் களமிறங்கி போராடி வருகிறது பாஜக. மறுபுறம் இடதுசாரி கட்சிகளான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் இணைந்து பிரதமர் மோடிக்கு எதிரான வலுவான பிரதமர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கிவிட்டனர். இதன் துவக்க புள்ளியாகத்தான் கடந்த மார்ச் 1ம் தேதி தேசிய கட்சி தலைவர்கள் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் பின்னணியில் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தரப்பில் நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் நினைப்பதும், பிரதமர் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என திமுக தரப்பும் நினைக்கின்றது.

இந்த நிலையில் வரும் தேர்தல் செலவுகளை எப்படியாவது கவனித்து விட வேண்டும் என கட்சிகள் அதற்குண்டான பணிகளில் இறங்கியுள்ளது. தேர்தல் என்றால் செலவுகள் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் தற்பொழுது அரசியல் கட்சிகள் குறிப்பாக திமுக அதற்கான வசூல் வேட்டையில் இறங்கி உள்ளது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 250 கோடி ரூபாய் செலவு செய்த திமுக தற்பொழுது 40 தொகுதிக்கும் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என சேர்த்து 40 தொகுதிக்கும் செலவு செய்ய குறைந்தபட்சம் சில நூறு கோடி ரூபாயாக தேவைப்படும் எனவே அந்த பணத்தை வசூல் செய்வதில் முழு வேகத்தை காட்டுங்கள் என கட்சியினருக்கு குறிப்பாக திமுக அமைச்சர்களுக்கு அறிவாலய தரப்பு வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக தேர்தல் நிதி பத்திரம் வாயிலாக நன்கொடை வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நிதியை 90 சதவீதத்துக்கு மேல் தேர்தல் பத்திரம் வாயிலாக திமுக பெற்றுள்ளது அதே முறையை லோக்சபா தேர்தலிலும் நடைபெற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் தேசிய அளவில் பிரதமரை உருவாக்கும் சக்தியாக நாம் இருந்தால் மட்டுமே தேசிய அரசியல் காலூன்ற முடியும் இல்லையெனில் நமக்கு அரசியலில் சறுக்கல் ஏற்படும் என முடிவெடுத்துள்ளது.

மேலும் திமுக தரப்பு மாநில அரசியலில் ரொம்ப நாளைக்கு ஈடுபட முடியாது, மற்ற மாநில கட்சிகள் அனைத்தும் தேசிய அரசியலில் ஈடுபடுத்துவாங்கிய நிலையில் நாம் மட்டும் மாநில அரசில் பேசிக் கொண்டிருந்தால் நீண்ட நாளுக்கு அது சரியான பாதையாக இருக்காது என திமுக தரப்பு முடிவு எடுத்து விட்டது. அதனால் தான் ஈரோடு கிழக்கில் செலவு செய்ததைப் போல மூன்று மடங்கு செலவு செய்ய திமுக தற்பொழுது தயாராகிவிட்டது. இதற்கான தேர்தல் நிதி வசூலில் இப்போது இறங்க திமுக அரசு அமைச்சர்களுக்கு மறைமுக அசைன்மென்ட் கொடுத்துள்ளது. அதன்படி அனைத்து அமைச்சர்களும் தங்களது துறைகளின் சக்திக்கு ஏற்ப சிறப்பான நிதி வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது திமுக தலைமை.

கூட்டணி எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் இப்பொழுது வசூலே முக்கியம் என முடிவெடுத்துள்ளது அறிவாலயம், பிரச்சார செலவு, விளம்பர செலவு, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு வழங்க அதிக தொகை, சமூக வலைதள விளம்பரம், கட்சி மற்றும் வேட்பாளர் ப்ரமோஷன் செலவு என 40 தொகுதிகளுக்கு குறைந்தபட்சம் 500 கோடி தேவைப்படும் என்ற நிலை உள்ளது. இன்றைக்கு செலவில்லாமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்சியாக திமுக வசூலை துவங்கியுள்ளது.

இதனால் வட மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி மொத்தமாக வழங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இப்படி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வசூலை இப்பொழுதே துவக்கினால் மட்டும் தான் தேர்தல் வேலையை முழு வீச்சில் நடத்த முடியும் என திமுக இறங்கி இருப்பது துறை வாரியாக இருக்கும் சில அதிகாரிகள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் துறைவாரியாக ஒவ்வொரு அமைச்சர்களும் வசூலை நிர்ணயித்து அடிக்க ஆரம்பித்தால் முதலில் பாதிக்கப்பட போவது என்னவோ அதிகாரிகள் தான் அவர்கள் தான் அந்த வசூலை கவனித்து அமைச்சர்களுக்கு அந்த தொகையை சென்று சேரும்படி பார்க்க வேண்டும் இப்படி இதுவரையும் செய்தது பத்தாது என தற்பொழுது மேலும் அடிக்க திமுக துவங்கியிருப்பதால் என்ன நடக்குமோ என அதிகாரிகள் விழி பிதுங்கி வருகின்றனர்.

Similar News