'நீ விளையாடு நான் பாத்துக்கிறேன்' - தட்டி கொடுத்த ஜே.பி.நட்டா முன்பை விட அடித்து ஆட தயாராகும் அண்ணாமலை!

Update: 2023-03-11 12:28 GMT

ஒரு பக்கம் திமுக அரசை கண்டித்து போராட்டம், மறுபுறம் ஜே பி நட்டாவை அழைத்து தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் திறப்பு என அண்ணாமலை பம்பரமாக சுழன்று வருகிறார்.

சமீபகாலமாக தமிழக பாஜகவில் ஏற்படும் நிகழ்வுகள் அண்ணாமலையை சற்று சோதனைக்கு உள்ளாக்கி வருகிறது. குறிப்பாக கூட்டணி கட்சியான அதிமுகவின் இடையே ஏற்பட்ட சிறு சலசலப்பு, அதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவில் உள்ள தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் போன்ற சில நிர்வாகிகள் வெளியேறியது மேலும் ஏற்கனவே கூட்டணி கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் அண்ணாமலையை குறை கூறுவது என அண்ணாமலை சற்று சோதனை காலத்தில் தான் உள்ளார். மேலும் தற்பொழுது அண்ணாமலை கர்நாடக தேர்தல் மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டிருப்பதும் அண்ணாமலைக்கு கூடுதல் பணி சுமையை கொடுத்துள்ளது.

இருந்தாலும் தமிழகத்தில் அரசியல் ரீதியாக சற்று சோதனை காலத்தை சந்தித்தாலும் அண்ணாமலையின் நடவடிக்கைகள் முன்பை விட முழு வேகமாக இருக்கிறது என அண்ணாமலைக்கு ரொம்பவே நெருக்கமானவங்க சொல்றாங்க. இப்படி அண்ணாமலை முன்னைவிட சுறுசுறுப்பா இயங்குகிறது பாஜக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எத்தனை பேர் வந்தாலும், எத்தனை பேர் போனாலும் என்னோட ஸ்பீடு மாறாது அப்டின்னு அண்ணாமலை வேகமா போறாருங்க, ஒருபக்கம் அண்ணாமலை தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து ரொம்பவே விமர்சித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார், இது மட்டுமில்லாம வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்து இருந்தார். இதனால சமயம் பார்த்து காத்திருந்த திமுக அரசு அண்ணாமலை மேல் வழக்கு பதிந்துள்ளது, இப்படி அண்ணாமலை மீது போட்ட வழக்க கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் முன்னெடுக்கும் அறப்போராட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரமாண்டமாய் நடந்தது.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை அழைத்து வந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், தேனி, திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகங்களை திறக்க வைத்தார்.

இப்படி ஒருபுறம் திமுக அரசை எதிர்த்து போராட்டம், மறுபுறம் கட்சியின் கட்டமைப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல தேசிய தலைவரை அழைத்து வந்து திறப்பு விழா என அண்ணாமலை முன்பு விட விட பம்பரமாக சுற்றி வருகிறார். மேலும் அண்ணாமலையிடம் பாஜக அலுவலக கட்டிட திறப்பு விழாவிற்கு வந்த தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 'என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் நான் இருக்கிறேன் டோன்ட் ஒரி' என கூறியுள்ளதாகவும் 'உனக்கு கட்சி வளர்ச்சிக்கு என்ன சரி என்று தோன்றுகிறதோ அனைத்தையும் செய்' என உற்சாகப்படுத்தியதாகவும் தெரிகிறது.

இந்த ஒரு வார்த்தையின் காரணமாக ஏற்கனவே பம்பரம் போல சுழன்று வரும் அண்ணாமலை மேலும் வரும் காலங்களில் இன்னும் வேகமாக தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு இன்னும் தீவிரமாக வேலை செய்வார் எனவும் தெரிகிறது.

மேலும் இது குறித்து கமலாலய தரப்பில் விசாரித்த பொழுது கட்சியில் ஒரு சிலர் வருவார்கள், செல்வார்கள் அதெல்லாம் பிரச்சனை கிடையாது ஆனால் அண்ணாமலை அதனை எல்லாம் மனதில் ஏற்றிக்கொள்பவர் கிடையாது. இவர் ஏற்கனவே அமித்ஷாவிடம் தலைவராக வரும்பொழுது கூறிவிட்டு வந்தது என்னவென்றால் 'என்ன நடந்தாலும் எது இருந்தாலும் நான் 2026 வரை தலைவராக இருப்பேன்' தமிழகத்தில் பாஜகவை ஒரு உறுதித் தன்மையுடன் ஏற்படுத்தி விட்டு தான் அங்கிருந்து நகர்வேன்' என கூறி அதனை அண்ணாமலை அதை ஒரு தவம் போன்று செய்து வருகிறார்.

இது மாதிரி சின்ன சலசலப்புக்கு எல்லாம் அண்ணாமலை பயப்படுபவர் கிடையாது, இது அரசியல் ரீதியாக நடக்கக்கூடிய மாற்றங்கள் தான் அண்ணாமலை எல்லோரும் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எல்லாம் கூறுவார்கள் அண்ணாமலை பின்தங்கி விட்டார் அண்ணாமலை சோர்ந்து விட்டார் என, கிடையாது நடக்கும் ஒவ்வொரு விஷயங்களை அண்ணாமலை உன்னிப்பாக கவனித்து வருகிறார் அவருடைய நடவடிக்கைகளை வெளியில் செல்லவில்லை என்றாலும் சரி அவர் என்ன செய்தால் என்ன நடக்கும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளார் எனவும் கூறுகின்றனர்.

எது எப்படியோ எங்களுக்கு கட்சி வளர்ந்தால் சரி என பாஜகவினர் உற்சாகமாக தற்போது வேலை செய்து வருகின்றனர்.

Similar News