'இதுக்கு ஏன் கறுப்பு சட்டை போட்டு சுத்தணும்?' - தந்தை பெரியார் கழகத்து ஆட்களை கலாய்த்து வானதி சீனிவாசன் செய்த சம்பவம்!

Update: 2023-03-17 08:59 GMT


நாள் முழுவதும் கையில் சாம்பல் சட்டியுடன் தந்தை பெரியார் திராவிட கழகத்தை லேப்ட்டில் டீல் செய்யும் விதமாக வானதி சீனிவாசன் கேள்விக்கு அமைதியாகிவிட்டனர் கருஞ்சட்டையினர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாக வடித்தது, குறிப்பாக ஆளுநர் கூறுவது என்னவென்றால் இதை நான் கையெழுத்துட்டு அனுப்பித்தால் கோர்ட்டில் சென்று ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சட்டத்தில் உள்ள சிக்கலான விஷயங்களை வைத்து இதற்கு தடை வாங்கக்கூடும், அந்த அளவிற்கு இதனை ஒரு உறுதியில்லாத சட்டமாக தயார் செய்து வைத்துள்ளது திமுக அரசு எனவே இதை உறுதியான சட்டமாக தயார் செய்து அனுப்புங்கள் அல்லது இதனை வந்து நிபந்தனைகளுடன் மற்றும் விதிமுறைகளுடன் கூடிய சட்டமாக அனுப்புமாறு செய்யுங்கள் என ஆளுநர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

உடனே இதனை திமுக வழக்கம்போல் 'அய்யோ ஆளுநர் எங்களை அவமானப்படுத்திவிட்டார்! ஐயையோ சட்டத்தை திருப்பி அனுப்பிவிட்டார்! 40 உயிரை பழிவாங்கிய விவகாரத்தில் இப்படி அலட்சியமாக இருக்கிறாரா!' என வழக்கம்போல் திமுக அரசு அரசியல் வருகிறது. இந்த நிலையில் திமுக அரசு வழக்கமாக எடுக்கும் நடவடிக்கையாக எங்கே கூப்பிடுங்கள் நம் போராட்ட அணியை என கூப்பிட உடனே வந்தனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். இந்த மாதம் கருப்பு சட்டை போட்டு போராட நமக்கு ஒரு வழியில்லையே என நினைத்த திராவிடர் கழகத்தை கூப்பிட்டு ஆளுநருக்கு எதிராக ஒரு போராட்டத்தை எடுக்க சொன்னதும் உடனே அவர்களும் குஷியில் ஆகா இதுதான் சமயம், இந்த மார்ச் மாதத்திற்கு என்னடா போராட்டமே இல்லை? என்று நினைத்துக் கொண்டிருந்தமே, மார்ச் 16 தேதி ஆகிவிட்டது இருக்குமா என சந்தேகத்தில் இருந்த நேரத்தில் இந்த செய்தி கிடைத்ததும் போராட்டத்தில் குதித்து விட்டனர்.

இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவியை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் உயிரிழந்தவர்களின் சாம்பல் அனுப்பும் போராட்டம் கோவையில் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் இறந்தவர்கள் சாம்பலை சட்டியில் வைத்து அதனை ஆளுநருக்கு அனுப்ப போகிறோம் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்படி கருப்பு சட்டையுடன் இந்த வேகாத வெயிலில் போராடிய ஈ.வே.ரா ஆதரவாளர்களே கதற விட்டுள்ளார் வானதி சீனிவாசன். பாஜக மகளிர் அணி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பெயரில் பெண்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

இந்த விழா கோவை சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தந்தை பெரியார் திராவிடர் கழக போராட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், 'ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. இந்த தடைச் சட்டம் கொணடு வரும் போது நாளை நீதிமன்றத்தில் அது செல்லுபடி ஆகக் கூடிய சட்டமா என்பதை ஆளுநர் கேட்டுள்ளார். இதே கேள்விகளை நாளை நீதிமன்றம் கேட்டால் தமிழக அரசு அல்லது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சாம்பல் அனுப்புமா. சாம்பல் அனுப்பும் போராட்டம் என எத்தனை போராட்டம் வேண்டுமானாலும் நடத்தட்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். இவ்வாறு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

குறிப்பிடுக மேலும் உதயநிதிக்கு ஒரு குட்டு வைக்கும் விதமாக, 'நீட் தேர்வு விவகாரத்தில் தொடர் போராட்டம்தான் தங்கள் ரகசியம் என திமுக கூறியுள்ளது. இந்த ரகசியத்தையா அவர்கள் இவ்வளவுநாள் வைத்திருந்தார்கள். மக்களை ஏமாற்றுவதில் திமுகவில் தலைமை வேறுபாடு என்பதே இல்லை. திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் உதயநிதி சொல்லும் வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்' என கூறினார். இப்படி ஆளுநருக்கு எதிராக போராட்டம் செய்கிறேன் என கையில் சாம்பல் சட்டி எல்லாம் தூக்கிக்கொண்டு போராடிய திராவிட கழகத்தை வானதி சீனிவாசன் அசால்ட்டாக டீல் செய்தது 'நாள் முழுவதும் வெயில் நின்றோமே இப்படி அசிங்கப்படுத்தி விட்டார்களே' என்கிற ரீதியில் புலம்பி வைத்துவிட்டது.

Similar News