பிரதமர் மோடியை தனியாக சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின் - கூட்டணி கட்சிகளை விட்டுவிட்டு திமுக சரணடைந்த பின்னணி!

Update: 2023-03-19 10:43 GMT

'ஐயா உங்கள கொஞ்சம் பார்த்து தனியா பேசணும்' என பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ள விவகாரம் திமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை பயணியர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த விமானநிலைய முனையங்களின் முதல் கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்தி ரமோடி வரும் 27 ஆம் தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளார்.

தற்பொழுதுள்ள தமிழக அரசியல் சூழலில் வரும் 2024 தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி மற்றும் வியூகங்களை வகுத்து வரும் நிலையில் பிரதமர் வருவது முக்கியமாக பார்க்கப்படுகிறது. பிரதமரின் இந்த வருகையை ஒட்டி தமிழக பாஜகவின் கூட்டணியில் சிறிது மாற்றங்கள் நிகழலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மேலும் ஏற்கனவே பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிறு கட்சிகள் மற்றும் அந்தந்த பகுதிகளில் பலமாக உள்ள கட்சிகளை பாஜக கூட்டங்களில் இணைக்க திட்டமிட்டு இருக்கிறோம் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது. இப்படி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் அரசியல் அரசியல் நிகழ்வுகளுக்கு ஆரம்பமாக இருக்கப் போகும் பிரதமர் மோடியின் இந்த விஜயத்தில் பிரதமரை சந்திக்க தனியாக சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.

இப்படி பொதுவெளியில் பாஜகவை எதிர்த்துவிட்டு பிரதமர் வருகையின் போது மோடியை சந்திக்க அதுவும் தனியாக சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளது திமுக கூட்டணி கட்சிகள் இடையே சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக இருக்கும் கூட்டணியில் நான் இருக்க மாட்டேன் என திருமாவளவன் கூறி வருகிறார், மேலும் கம்யூனிஸ்டுகளுக்கும் பாஜகவுக்கு விற்கும் ஒத்துப் போவதே கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் எதற்காக பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் எனவும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அவரது மகன் சென்று பிரதமரை சந்தித்து வந்தார், இப்பொழுது அவரிடம் தனியா பேச என்ன இருக்கிறது எனவும் கூட்டணி காட்சிகள் இப்பொழுதே கதறலை ஆரமித்துள்ளன.

அரசியல் ரீதியான காரணங்களாக இருந்தாலும் அதனை பொதுவெளியில் கேட்கலாம், அல்லது கடிதம் எழுதலாம் அதனை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக முதல்வர் ஸ்டாலின் தனியே சந்திக்க வேண்டும் அப்படி என்ன இருக்கிறது? பிரதமரை முதல்வர் தனியாக சந்திக்க எனவும் கேள்வி எழுப்பிவருகின்றறன எதிர்க்கட்சிகள். எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை ரெய்டு போகும் சமயத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் எந்த விவகாரத்திற்கும் அமலாக்கத்துறை ஏன் தலையிடவில்லை என்ற விமர்சனங்களை அரசியல் விமர்சகர்கள் முன்னிறுத்தி வருகின்றனர்.

இப்படி பிரதமர் வருவதற்கு பத்து நாளைக்கு முன்பே பிரதமர் விஜயம் தமிழக அரசியலில் கடும் அதிர்வலைகைளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரை சந்திக்க வேண்டும் என்றால் அலுவலக ரீதியாக சந்திக்க வேண்டும், எதற்கு தனியாக சந்திக்க நேரம் கேட்க வேண்டும்? கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் உதயநிதி சென்று சந்தித்து விட்டு வந்தார் இந்த நிலையில் எதற்காக முதல்வர் பிரதமரை சந்திக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர் கூட்டணி கட்சியினர். மேலும் ஒரு சில அரசியலை விமர்சகர்கள் பாஜகவிடம் திமுக சரணடைந்துவிட்டது, பாஜகவை திமுக வெளியில் எதிர்ப்பதாக காட்டிக் கொண்டாலும் உள்ளூர பாஜக வை எதிர்ப்பதை திமுக விரும்பவில்லை! மேலும் வரும் 2024 தேர்தலில் எப்படியாவது பாஜக கூட்டணியில் இணைந்து விட வேண்டும் என திமுக கணக்கு போட்டு வருகிறது. தற்பொழுது இருக்கும் காங்கிரஸ் கூட்டணி வலுவாக இல்லை என்ற காரணத்தினாலும், பிரதமர் வேட்பாளரை யார் என்று தெரியாமல் இருக்கும் நிலையில் பொதுவெளியில், மேடைகளில் பாஜக எதிர்ப்பை பேசினாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாஜக தான் ஆட்சியில் இருக்கும் என்ற நிலையில் எதற்காக பாஜகவை பகைத்து கொள்ள வேண்டும் எனவும் பகைத்துக் கொள்வதே தேவையில்லாத ஒன்று, அதற்கு வெளியிலிருந்தாவது ஆதரவு தரலாம் எனவும் திமுக அரசியல் கணக்கு போட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் திமுக கூட்டணி கட்சிகளை சமாளிப்பதற்காகவும், மக்கள் மத்தியில் ஏற்கனவே பாஜகவை எதிர்த்து விட்டோம் இப்பொழுது எதிர்க்காமல் ஆதரித்து பேசினால் நமது மதிப்பு குறைந்துவிடும் என்பதற்காகவும் அவ்வபோது பாஜக எதிர்ப்பு என்கின்ற கேடயத்தை திமுக பயன்படுத்தி வருகிறதே தவிர உண்மையில் திமுக பாஜகவை எதிர்க்கவில்லை பணிந்தே செல்கிறது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News