தமிழக பாஜக வளரவேண்டும் என நினைபபவர்கள் யார்? தமிழக பாஜக பத்தோடு பதினொன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது யார் என தெரிந்துகொள்ள அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது.
தமிழக அரசியல் களம் தற்பொழுது பாஜகவை சுற்றியே நகர்கிறது என கூறலாம், குறிப்பாக தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது? யார் என்ன பேசுகிறார்கள்? யார் வெளியில் செல்கிறார்கள்? யார் என்ன கருத்தை கூறுகிறார்கள்? என மற்ற கட்சிகள் அதனை விமர்சித்தோ, ஆதரித்தோ பேசி அரசியல் செய்யும் நிலையில் தான் தற்பொழுதைய தமிழக அரசியல் உள்ளது. தமிழக பாஜக தான் தற்பொழுது பேசுபொருளாக ஆகிவிட்டது, இவ்வளவுக்கும் தமிழக பாஜக ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது தமிழகத்தில். இப்படி பாஜக தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறிவர காரணம் அண்ணாமலை என்ற இளைஞரின் தமிழக பாஜக தலைமை, ஜே.பி.நட்டாவும், அமிஷாவும், பி.எல்.சந்தோஷும் எதை முன்னிறுத்தி அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தார்களோ அதற்கு உண்டான காலம் தற்பொழுது நெருங்கிவிட்டது.
தமிழக பாஜக இத்தனை ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும், இல்லையேல் தனித்து நிற்கும் ஆனால் பெருமளவில் மக்கள் பிரதிநிதிகளை பெற முடியாத நிலையில் இருந்து வந்தது என்றே கூற வேண்டும். தமிழக பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கும் பொழுது அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் வேறு மாதிரி இருக்கும், திமுக கூட்டணியில் இருக்கும் பொழுது பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் வேறு மாதிரி இருக்கும். ஆனால் தற்பொழுது தமிழக பாஜக அதனை எல்லாம் தகர்த்துவிட்டு கூட்டணி அமைந்தால் அது பாஜக தலைமையில் தான், இப்படி தமிழக பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால்தான் பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரும் என்ற நிலையை எட்டி உள்ளது. இதற்கு அண்ணாமலை போட்ட திட்டமும் ஒரு முக்கிய காரணமாகும், குறிப்பாக தற்பொழுது உள்ள சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி எப்படியும் காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாத எதிர் கூட்டணியில் தான் 2024 தேர்தலை சந்திக்கும். அதிமுக கூட்டணி தற்பொழுது இருக்கும் இரட்டை தலைமை முடிவிற்கு வந்த உடன் திமுகவை எதிர்ப்பதை பிரதானமாக வைக்குமே தவிர தேசிய அரசியலில் என்றுமே அதிமுக பெரிய அளவில் ஆர்வம் காட்டியதில்லை.
அதிமுகவை பொறுத்த வரையில் மக்கள் மத்தியில் நாங்கள் எம்ஜிஆர் துவங்கிய கட்சி, ஜெயலலிதா வழி நடத்திய கட்சி திமுகவின் எதிர்ப்பே எங்கள் நிலைப்பாடு என்கிற ரீதியில் அரசியல் செய்து தான் வருமே தவிர தேசிய அரசியலில் பெரிய அளவில் அதிமுக என்றுமே ஈடுபட நினைத்ததில்லை, ஈடுபடமும் ஈடுபடாது. இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் தேசிய அரசியலில் பங்கு பெற விரும்பும் கட்சிகளான புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, அமமுக இது போன்ற கட்சிகள் தங்களுடைய பிரதிநிதிகள் நாடாளுமன்றம் வரை செல்ல வேண்டும் என நினைக்கும் கட்சிகளாகும்.