ஆ.ராசா, திருமாவளவனுக்கு தூக்கத்தை கெடுத்த நீதிமன்ற தீர்ப்பு - எல்லாம் போச்சே என புலம்பல் ஆரம்பம்!
'ஆஹா இனி இது வேறயா' என திருமாவளவன், ஆ.ராசா ஆகியோரை புலம்ப வைத்துவிட்டது கேரளா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!
அரசியல் உலகில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கேரள நீதிமன்றம் வழங்கியுள்ளது. தனித் தொகுதியில் போட்டியிடும் பொழுது குறிப்பாக பட்டியலின சமுதாயத்திற்கான ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியில் சில இடங்களில் மதம் மாறியவர்கள் தாங்கள் மதம் மாறியதை மறுத்து அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவியில் அமர்வது ஆங்காங்கே நடந்து வந்தது. இது தமிழகத்திலும் சில இடங்களில் நடந்துள்ளது என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்னன, ஆனால் இந்த நிலையில் இப்படி மதம் மாறினவர்கள் என்பதை மறைத்து பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டி போட்டு பட்டியலின மக்களின் உரிமையை பறித்து வந்தவர்களின் மீது அதிரடி இடியை இறக்குமாறு ஒரு தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது கேரள நீதிமன்றம்.
கேரள மாநிலத்தில் சிபிஎம் கட்சி 2021 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வென்றது. மொத்தமுள்ள 140 இடங்களில் 99 தொகுதிகளை சிபிஎம் கூட்டணி கைப்பற்றியது. இரண்டாவது முறையாக முதல்வரானார் பினராயி விஜயன், அந்த தேர்தலில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டசபை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் ஏ.ராஜா வெற்றி பெற்று எம்.எல்.ஏ'வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான டி குமாரை விட 7,848 வாக்குகள் கூடுதலாக பெற்று கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ராஜா வென்றார். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஏ ராஜா பதவியேற்கும் போது தமிழில் உறுதிமொழி வாசித்து பதவி ஏற்ற விவகாரம் அப்பொழுது வைரலாகியது! பாருங்கள் இவர் தமிழில் உறுதிமொழி ஏற்கிறார், இவர் தமிழ் பற்று ஆச்சர்யப்படவைக்கிறது, இவர் மலையாள நாட்டிற்கு சென்றாலும் தமிழை விடவில்லை இதுதான் தமிழன்! இதுதான் தமிழர் பண்பாடு என்பது போன்றெல்லாம் இணையத்தில் அப்பொழுது பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தேவிகுளம் என்பது தனித் தொகுதி அந்த தனி தொகுதியில் கிறிஸ்தவர் என்பதை மறைத்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து ஏ.ராஜா போட்டியிட்டதாகவும் அதனால் அவர் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரியும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான டி.குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்து தீவிரமாக வந்தது, இந்த நிலையில் ஏ.ராஜாவின் தந்தை ஆண்டனியும், அவரது தாய் எஸ்தரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர் தாயின் இறுதிச்சடங்கு சர்ச்சில் வைத்து நடைபெற்றது எனவும் ஏ.ராஜாவும் கிறிஸ்தவ சபையின் அங்கமாக இருப்பதாகவும் டி குமார் தனது மனுவில் கூறியிருந்தார்.