கனிமொழிக்கும், உதயநிதிக்கும் சண்டையை மூட்டிய செந்தில்பாலாஜி - பரபர பின்னணி என்ன?
திமுகவில் உதயநிதி தரப்பிற்கும் கனிமொழி தரப்பிற்கும் தற்பொழுது அமைச்சர் செந்தில்பாலாஜி காரணமாக மோதல் அதிகமாக வெடித்துள்ளது.
திமுகவில் தற்போது தலைவர் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தங்கை கனிமொழி மகளிர் அணியை நிர்வகித்து வந்தார், மேலும் அவர் அதிகமாக உழைத்து மகளிர் அணியை உருவாக்கியவர் என திமுகவினரால் பாராட்டப்பட்டு வந்தவர், தற்பொழுது துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் கனிமொழி மகளிர் அணியை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்து செல்ல பல திட்டங்கள் வைத்திருந்தார் என திமுக தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது எனவும் உதயநிதி தான் முன்னிறுத்தப்படுகின்றார் கனிமொழி முன்னிறுத்தப்படவில்லை மேலும் கனிமொழியை முன்னிறுத்தாமல் வைப்பது ஓரங்கட்டி வைப்பதற்கான வேலைகள் நிறைய நடந்து வருகிறது அந்த வேலைகளை முதல்வர் ஸ்டாலின் குடும்ப முன்னெடுத்து வருகிறது என்ன பல தகவல்கள் அவ்வப்போது உலாவி வந்தன.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜியால் திமுகவில் உதயநிதி கனிமொழிப் பிரச்சினை அதிகமாக வெடித்துள்ளது. திமுகவில் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்காணல் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. இந்த நேர்காணலை கடந்த பிப்ரவரி 11-ம் தேதி திமுகவின் துணை பொதுச்செயலாளரான கனிமொழி துவங்கி வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த துவக்க நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது, அதில் சேர்வதற்கு வருபவர்களை நேர்காணல் எடுத்து மகளிரணியினர் சேர்த்து வருகின்றனர். மேலும் திமுகவின் மகளிர் அணி செயலாளரான ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் அணியின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பை கனிமொழி தான் தற்பொழுது பார்த்து வருகிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்காணல் தொடர்பாக வெளியிடப்படும் விளம்பரம் மற்றும் நோட்டீஸ் ஆகியவற்றில் கனிமொழியின் படம் தான் இதுவரை இடம் பெற்று வந்தது. ஆனால் கொங்கு மண்டலமான கோவை மாநகர், தெற்கு கோவை, தெற்கு வடக்கு மாவட்டங்களில் நடைபெறும் நேர்காணலில் கனிமொழியின் படம் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக உதயநிதியின் படம் விளம்பரத்தில் இடம்பெற்று இருப்பது மகளிர் அணியில் மட்டுமல்ல திமுகவிலேயே பஞ்சாயத்தை ஏற்படுத்தி உள்ளது.