அண்ணாமலை மாற்றப்படுவார் என காத்திருந்தவர்களுக்கு ஜே.பி.நட்டா கொடுத்த ஷாக் - பரபர டெல்லி பின்னணி!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என எதிர்பார்த்து வந்தவர்களுக்கு ஜேபி நாட்டாவின் அறிவிப்பு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வரும் வேளையில் தமிழக பாஜக மக்கள் மத்தியில் மட்டுமல்ல இதர கட்சிகளும் பேசும் முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது. அதுவும் தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் அரசியல் முடிவுகள் மற்றும் அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்த வண்ணம் இருந்தனர். மேலும் அண்ணாமலையை எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் அடிக்கடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அனுபவம் இல்லை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக செயல்பட மாட்டேன் என்கின்றார்! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியில் உள்ள மூத்தவர்களை அனுசரித்து செல்லவில்லை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீடியாக்களுக்கு மதிப்பளிப்பதில்லை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவசர முடிவுகள் எடுக்கிறார்! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனுபவம் இன்மையால் பாஜகவை அழிவின் பாதைக்கு கொண்டு செல்கிறார்! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூட்டணி கட்சிகளை மதிப்பதில்லை! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை என்கின்ற ரீதியிலான கருத்துக்களை உள்நோக்கத்துடன் பரப்பி வந்தனர்.
மேலும் தமிழக பாஜக வளருவதாலேயே இந்த கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன என ஒரு சில கருத்துக்களும் கூறப்பட்டு வந்தது. மேலும் அண்ணாமலை செல்லும் பாதை சரி, அவர் சரியான பாதையில் செல்வதாக தான் இது போன்ற விமர்சனங்கள் எழுகின்றன என் அண்ணாமலை ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். இதனை ஒரு சில மூத்த பத்திரிகையாளர்களும் ஒத்துக்கொண்டனர், மூத்த அரசியல் விமர்சகர்களும் ஒத்துக்கொண்டனர்.
மேலும் தமிழகத்திலிருந்து எப்படியாவது அண்ணாமலை மாற்றப்படுவார் அதன் காரணமாகத்தான் கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இது அண்ணாமலையை ஓரங்கட்டும் செயல், இப்படி முதலில் அண்ணாமலை வேறு மாநிலத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பின்னாளில் அண்ணாமலை பதவியில் இருந்து அகற்றப்படுவார் என்பது போன்ற கருத்துக்கள் கூட எதிர்க்கட்சிகளால் பரப்பப்பட்டு வந்தன.
ஆனால் அவை அனைத்தையும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஒரு அறிவிப்பின் மூலம் தவிடு பொடி ஆக்கிவிட்டார். இன்று காலை இந்தியாவின் முக்கிய பாஜக மாநில தலைவர்களை மாற்றம் செய்து பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், 4 மாநிலங்களுக்கு பாஜக மாநில தலைவர்களை மாற்றியுள்ளது அறிவித்துள்ளார். டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா என 4 மாநில தலைவர்கள் பாஜக தேசிய தலைமையால் மாற்றப்பட்டுள்ளனர்.