பேசின ராகுலுக்கே இப்படீன்னா, செங்கல்லை தூக்கி காமிச்ச நமக்கு? - பதட்டத்தில் உதயநிதி!
என்ன ராகுல் காந்தி பதவி நீக்கமா? என அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாது அச்சமும் அடைந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி" என ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்துவிட்டார். ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி ஏதாவது ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அதன் அடிப்படையில் இனிவரும் 8 ஆண்டுகள் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி ராகுல் காந்தி பதவி நீக்கப்பட்ட விவகாரம் மற்றும் அதனை தொடர்ந்து தேர்தலில் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பங்கேற்க முடியாது என்பது போன்ற விவகாரமும் இந்திய அரசியலில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, குறிப்பாக கூற வேண்டும் என்றால் தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியை நம்பியே தேசிய அரசியல் செய்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் திமுகவை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக திமுகவின் அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.