விசாரணைக்கும், வீட்டிற்கும் அலையும் கே.சி.ஆர் கவிதா - பீதியில் ஆ.ராசா, கனிமொழி!

Update: 2023-03-25 13:32 GMT

கே.சி.ஆர் மகள் கவிதா அமலாக்கத் துறையுடன் சிக்கி தவிக்கும் விவகாரம் தமிழகத்தில் குறிப்பாக திமுகவில் கனிமொழி, ஆராசா இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தற்பொழுது உள்ள பரபரப்பான அரசியல் சூழலில் வழக்குகள், முறைகேடு வழக்குகள், ஊழல் வழக்குகள், தேர்தல் விதிமுறை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம், பதவியை முறையாக பயன்படுத்தாமல் இருந்தது போன்ற முறைகேடுகள் அனைத்தும் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டு வருகிறது. பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளான வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் கே.சந்திரசேகர ராவின் மகளும் தெலங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிதாவைத் தொடர்ந்து விசாரித்துவருகிறது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்த வழக்கு தொடர்பாக அவரை அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது. அதே வழக்கில்தான், கவிதாவையும் அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது.


இதே வழக்கில், கடந்த ஆண்டு அவரைப் பல மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை செய்தது. தற்போது, அமலாக்கத்துறையால் அவர் விசாரிக்கப்பட்டுவருகிறார். அவரிடம், டெல்லியில் மார்ச் 11-ம் தேதியன்று ஒன்பது மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அடுத்து, மார்ச் 16-ம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அன்றைய தினம் அவர் ஆஜராகவில்லை. ஆகவே, மார்ச் 20-ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய தினம் கவிதா ஆஜரானார். இப்படி தொடர்ந்து அமலாக்கத்துறையால் கவிதா விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழகத்தில் அதுவும் குறிப்பாக திமுகவில் ஆ.ராசா, கனிமொழி மீதான ஊழல் வழக்குகள் மீதான நடவடிக்கை என்ன ஆகுமோ என திமுகவினரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.


திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து, டெல்லி, சென்னை, கோவை,திருச்சி, பெரம்பலூரில் ஆ.ராசாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி இந்த சோதனை அடிப்படையில் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஸ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய்சடரங்கனி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.


சில ஆண்டுகள் நடந்த விசாரணைக்குப் பிறகு, ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் மீது கடந்த மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு ஆ.ராசா சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்திருந்தது.


இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு தொடந்து விசாரணை நடந்து வருகிறது இந்த வழக்கு தொடர்பாக திமுக எம்.பி ஆ.ராசா மீதான இந்த வழக்கில் எந்நேரமும் நடவடிக்கை பாயும் என தெரிகிறது,


ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், '2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கனிமொழி, ராசா ஆகியோர் சிறை சென்றனர். அந்த வழக்கு தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் ஏற்கனவே இருந்த சிறைக்கு மீண்டும் செல்வார்கள் என குறிப்பிட்டதும் தற்போது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இப்படி கே.சி.ஆர் மகள் கவிதாவிற்கு நடந்து வரும் நடவடிக்கைகள் தொடந்து கவனித்து வரும் ஆ.ராசா, கனிமொழி தரப்பினர் நமது நிலைமை என்ன ஆகுமோ என அச்சத்தில் உள்ளதாக தெரிகிறது.

Similar News