காங்கிரஸ் கட்சிக்குள்ளே ராகுலுக்கு தோண்டப்பட்ட குழி - வெளிவரும் பகீர் தகவல்கள்!

Update: 2023-03-27 11:37 GMT

ராகுலை ஒழிக்க காங்கிரஸ் கட்சியை தீட்டிய திட்டம்தான் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ற பகீர் செய்தி வெளியாகி உள்ளது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி பிரதமர் மோடியுடன் சேர்த்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மிகவும் இழிவாக பேசிய சம்பவத்தை தொடர்ந்து பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு மட்டுமல்லாமல் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் வயநாடு எம்பி ராகுல் காந்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு சூரத் நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கியதைத் தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அரசியலமைப்புச் சட்டத்தின் 102 விதிகளின்படி, தண்டனை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து அதாவது 23 மார்ச், 2023 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது.


அதாவது மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின்படி எந்தவொரு குற்றத்திற்காகவும் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர், அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார். எனவே, தகுதி நீக்கம் என்பது மக்களவை அறிவிப்பால் அல்ல, சட்டத்தின்படியே நடந்துள்ளது. இனி இதன் காரணமாக ராகுல் காந்தி வரும் 8 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இப்படி ராகுலின் அரசியல் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு எதுவுமே செய்ய முடியாதபடி கையறு நிலையில் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியே என தற்பொழுது பாஜக தரப்பில் பெரும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து பாஜகவை சேர்ந்த மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் பிரிவு உள்ளது. ஆனாலும் சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்னும் மேல்முறையீடு செய்யவில்லை, இந்த வழக்கில் ராகுலுக்கு சரியான அறிவுரை வழங்கி வழிநடத்த கட்சியில் ஒருவர் கூடவா இல்லை? ராகுலை ஒழிக்க காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த சதித்திட்டதால் தான் அவர் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதை புரிந்து கொண்டு தனக்கு எதிராக கட்சியில் யார் ராகுல் குழி தோண்டுகிறார்கள் என அவர் கண்டுபிடிக்க வேண்டும்' என கூறியது தற்பொழுது காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்ட உடனேயே தகுதி நீக்கம் செய்யப்படும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பொதுநல மனுவில், "வழக்குகளில் தண்டனை பெற்றவுடன் உடனடியாக தகுதி நீக்கம் செய்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) சட்ட விரோதமானது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். எம்.பி.-எம்.எல்.ஏ.க்களை உடனே தகுதி நீக்கம் செய்யக்கூடாது" என்று கூறப்பட்டு உள்ளது. இப்படி பொதுநல வழக்குதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியபடி காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து இதுவரை சட்டப்போராட்டத்திற்கு எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வரும் நிலையில் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க முடியாத வகையில் அவருக்கு அடுத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ளதால் அவர் அந்த பங்களாவில் குடியிருந்து வரும் நிலையில் தற்போது அவரை காலி செய்ய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இத்தனை நாள் வரை பாஜக தான் எதிர்க்கிறது என நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளவே ராகுல் மற்றும் ராகுல் குடும்பத்தை ஓரம் கட்டும் வேலை நடந்து வருகிறது என மத்திய அமைச்சர் ஒருவரே கூறிய நிலையில் மேலும் இது குறித்து எந்த மாதிரியான தகவல்கள் வருமா என அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Similar News