ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்துடன் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பா? பரபர தகவல்கள்!

Update: 2023-03-27 11:40 GMT

திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கும் உறவு என்கின்ற ரீதியான விமர்சனங்கள் தற்பொழுது அதிகளவில் எழுந்துள்ளன.


ஆன்லைன் சூதாட்டத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் பணத்தை இழந்து அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கின்றனர் என்ற காரணத்தினால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என முடிவெடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த ஆண்டு சட்டசபையில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவை சட்டமாக்கினால் நிச்சயம் ஆன்லைன் நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்று இதில் உள்ள நுணுக்கங்களை பயன்படுத்தி இந்த தடை சட்டத்திற்கு விலக்கு வாங்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது எனவே இந்த மசோதாவை திருத்தி அனுப்புங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்

இதையடுத்து, கடந்த மார்ச் 9-ல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துதல் சட்டமசோதாவை தாக்கல் செய்து, அதை மறு ஆய்வு செய்யுமாறு கோரினார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, 'ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 41 பேர் தற்கொலை செய்தது வேதனை அளிக்கிறது. எனவே, இதைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், அரசுக்கு உள்ளது' எனக்கூறி மீண்டும் மசோதாவை தாக்கல் செய்து அனுப்பினார்.


இப்படி ஆன்லைன் ரம்மி விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பிய நிலையில் இதனை வைத்து அரசியல் திமுக செய்கிறது எனவும்,சட்டப்படி இதனை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் திமுக அவசரப்படுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'திமுக அமைச்சர்களுக்கு ஆன்லைன் ரம்மி கம்பெனிகளுக்கு உறவு இருக்கிறது' என சந்தேகத்தை எழுப்பியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, 'தமிழக அரசு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் மறுபடியும் எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அனுப்புகிறது. இம்முறை கவர்னர் கையெழுத்திட்டாக வேண்டும்.


ஆனால் சில நாட்களில் தனியார் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் எப்படியும் தடை வாங்கி விடுவர், அப்போது தமிழக அரசு வருத்தப்படும்! பலமுறை சொல்லியும் கேட்ட மூன்று காரணங்களை மாற்றி அனுப்புங்கள் எனக் கூறியும் எந்தவித மாற்றமும் செய்யாமல் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருப்பதால் திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி கம்பெனிகளுக்கும் உறவு இருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது' என சந்தேகத்தை எழுப்பி உள்ளார்.


ஏற்கனவே ஒருமுறை சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் தனியார் யூ டூப் நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில், 'இவர்கள் சட்டத்தை வைத்து ஆன்லைன் சூதாட்ட தலையை நிறுத்துவது போல் தெரியவில்லை சட்டத்தை இயற்றி அதனை எப்படியும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தடை வாங்கிவிடும் அப்படி வாங்கி விட்டால் எங்களால் செய்ய முடியவில்லை என திமுக அரசு கைப்பிடித்து விடும்.


இதன் காரணத்திற்காகவே திமுக அரசு இப்படி சட்டத்தை திருத்தாமல் அதே சட்டத்தை திரும்பி அனுப்புகிறது' என்றார். மேலும் 'இதன் பின்னணியில் இவர்களுக்கும் ஆன்லைன் நிறுவனங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து வருகிறது' எனவும் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு கோணங்களிலும் பல்வேறு விமர்சகர்கள், எதிர்க்கட்சிகள் ஆன்லைன் நிறுவனங்களுக்கும் திமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது பெரும் புகைச்சலை கிளப்பி உள்ளது.

Similar News