இந்துக்களை கவர புது ரூட்டில் இறங்கிய திமுக - வெளியான பரபர உண்மை!

Update: 2023-03-28 10:05 GMT

இத்தனை நாள் வரை கிறிஸ்தவ பாதிரியார்களையும், இஸ்லாமிய கட்சி தலைவர்களையும் மேடையில் வைத்து மத அரசியல் செய்து வந்த திமுக தற்பொழுது ஆதீனங்களை வைத்து மத அரசியல் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளது.


திமுகவிற்கு கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டுவரை ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக இந்துக்களின் வாக்கு வங்கி அமைந்தது. இந்துக்கள் வாக்கு வங்கி அமைந்த காரணத்தினால் நாம் வெற்றி பெற முடியாது என திமுக நன்கு உணர்ந்தது, இதன் காரணமாகவே 2021 தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி வேல் எடுத்து பிரச்சாரம் செய்தார்கள். இத்தனை நாள் வரையில் இந்துக்களின் கடவுள்களை இழிவுபடுத்தி, இந்து தெய்வங்கள் வழிபாட்டை கிண்டல் செய்து வந்த திமுக முதல் முறையாக தேர்தலில் வேல் எடுத்து வாக்கு கேட்டது. 'இந்துக்களுக்கு நாங்கள் எதிரி அல்ல' என கூறி ஓட்டு கேட்கும் அளவிற்கு சென்றது திமுக இதெற்கெல்லாம் இந்துக்களின் வாக்கு வங்கி மீதான பயம் மட்டுமே காரணம்.


இப்படி இருந்து வந்த நிலையில் அடுத்த தேர்தல்களில் 'இந்துக்களின் எதிரி அல்ல' நாங்கள் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது திமுக அரசு. அதற்காகவே மற்ற துறைகள் எல்லாவற்றையும் விட அறநிலைத்துறையை சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என திட்டமிட்டது மட்டுமல்லாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் 'நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல' என்கின்ற வகையில் நிரூபிக்க ஏதாவது செயலை செய்து கொண்டே வருகிறது திமுக.


அந்த வகையில் தற்போது ஆதீனங்களை அழைத்து அவர்களை வைத்து நிகழ்ச்சி செய்யும் அளவிற்கு இறங்கி வந்து விட்டது திமுக. முதல்வர் ஸ்டாலினின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபு சென்னையில ஏதாவது ஒரு விழா எடுத்து வருகிறார், அந்த வகையில் மக்கள் 'முதல்வரின் மனிதநேய திருநாள்' என்ற விழாவை 'அன்பே ஆன்மிகம் அதுவே தமிழ் ஞானம்' என்ற தலைப்பில் நடத்தினார். சென்னை பி.கே.என் மஹாலில் நடைபெற்ற அந்த ஆன்மீக அரங்கத்தை தமிழ்நாடு கைத்தறி மற்றும் அமைச்சர் ஆர்.காந்தி துவங்கி வைத்தார்.


அந்த விழாவில் திருவாடுதுறை ஆதீனம் குமரகுருபர அடிகளார், சாந்தலிங்கம் வரதாச்சலம் அடிகளார், சிவஞான பாளைய சுவாமிகள், அம்பலவான தேசிகர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சடகோப ராமானுஜர் என பலரும் கலந்து கொண்டு பேசினர். அப்போது அனைத்து ஆதீனமும் ஒருமித்த குரலில் 'திராவிட மாடல் அரசின் மக்கள் பணிகள் தொடர வேண்டும்' என்றனர்.

இந்த விழாவில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபால் ராமானுஜர், தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்லாண்டு காலம் வாழவேண்டும் இன்றைக்கு பல மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார் என்கின்ற வகையில் பேசியுள்ளார். மேலும் மயிலம் பொன்னம்பல ஆதீனமான சிவஞான பாளைய சுவாமிகள் 'முதல்வர் எல்லா மதங்களையும் ஒன்றாக பார்க்கிறார்' என பேசி உள்ளார். மேலும் மற்றொரு ஆதீனமான போரூர் ஆதீனம் சாந்தலிங்கம் வரதாச்சல அடிகளார் பேச வரும்போது 'சொல்லில் மட்டுமல்ல செயலிலும் சிறப்புடையவர் முதல்வர் ஸ்டாலின்' என நிரூபித்துக் கொண்டிருக்கிறார். திருவாரூரில் ஓடாது நின்ற தேரை இவரது தந்தையார் கலைஞர் திரும்ப ஓட்டினார், அவரைப் போல் தமிழ்நாட்டில் ஓடாமல் நின்று கொண்டிருந்த பல்வேறு துறைகளை எல்லாம் முடுக்கி ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்' எனவும் பேசினார்.


அதனை தொடர்ந்து பல ஆதீனங்கள் பேசினர் உதாரணமாக திருவாடுதுறை ஆதீனம் அம்பலமான தேசிகர் பேசும் பொழுது 'முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்தட்ட உதவிகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார், காலை சிற்றுண்டி திட்டம் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது, தாய்மார்களுக்கு ஆயிரம் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு இருக்கிறார் நம் முதல்வர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்' என பேசினார்.


மேலும் குமரகுரு அடிகளார, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் போன்றோரும் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்கள். இப்படி கிறிஸ்மஸ் வந்தால் பாதிரியார்களையும், ரம்ஜான் வந்தார் இஸ்லாமியர்களின் அழைத்து வைத்து இதுவரை அரசியல் மார்க்கெட்டிங் செய்து வந்த திமுக தற்பொழுது 'நாங்கள் இந்துக்களுக்கு எதிரி அல்ல' என்கின்ற வகையில் ஆதீனங்களை அழைத்து வைத்து அரசியல் மார்க்கெட்டிங் செய்ய துவங்கி இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இத்தனை நாள் வரை பெரியார் திராவிட கழகம், திராவிட கழகம் போன்ற கருப்பு சட்டைக்காரர்களை வைத்து தேர்தல் பிரச்சாரத்திலும் சரி, பொது கூட்டங்களிலும் பேசி வந்த திமுக இப்பொழுது ஆதீனங்களை வைத்து தங்கள் இமேஜை உயர்த்திக்கொள்ள பார்க்கிறது எனவும் கருத்துக்கள் உலா வருகிறது.

Similar News