இட ஒதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷா சாட்டையை சுழற்ற துவங்கிய சம்பவம் தற்பொழுது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்பொழுது நடைமுறையில் உள்ள சாதி மற்றும் மத வாரியான இட ஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் பொருளாதார ரீதியாக ஏழைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது சரி சாதி ரீதியாக வழங்கப்படும் இட ஒதுக்கீடு சில இடங்களில் முறைகேடுகளுக்கு வழி வகுக்கின்றன, பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கப்படும் சமயத்தில் அவை சரியான வகையில் சிரமப்படும் ஏழைகளுக்கு உதவும் என்பது போன்ற கருத்துக்கள் அதிகம் தலையெடுக்க துவங்கியுள்ளது.
மேலும் பொருளாதார ரீதியா ஐடா ஒதுக்கீடு வழங்கும் நேரத்தில் அவை இடஒதுக்கீடு எதற்காக வழங்கப்படுகிறதோ அதற்க்கு பயன்படும் மேலும் சாதி, மத ரீதியிலாக வழங்கப்படும் இடஒதுக்கீடு பல வேளைகளில், பல இடங்களில் முறைகேட்டிற்கு வழிவகுக்கிறது என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா இதற்கு முடிவெடுக்கும் விதமாக தனது சாட்டையை சுழற்ற துவங்கியுள்ளார்.
இதன் முதற்கட்டமாக சிறுபான்மையினருக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது இந்த முடிவை வரவேற்றுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் காரணத்தினால் பாஜக தலைவர்கள் கர்நாடகத்தில் தற்பொழுது அதிக அளவில் கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன. கடந்த வாரம் கூட பிரதமர் மோடி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், இந்த நிலையில் அங்கு தேர்தல் களம் இப்பொழுது சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகள் இறங்கி உள்ளன. ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என பாஜக மும்முரம் காட்டி வருகிறது, தேர்தல் பணிகளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேரடியாக கவனித்து வருகின்றனர். மேலும் தமிழக பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையை கர்நாடக தேர்தலுக்கு மேற்பார்வையாளராக அறிவித்து என்ன நடக்கிறது என அடிக்கடி அப்டேட் கேட்டு வருகின்றனர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்.