இனிமே எல்லாமே மாறுகிறது - புதிய நாடாளுமன்ற பின்னணியில் பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்!
புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட்ட பரபர பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இப்போதைய
நாடாளுமன்றம் சுமார் 96 ஆண்டுகள் பழைமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல்
பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய
நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுர கிலோ
மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. மத்திய விஸ்டா என்ற திட்டத்தின்
கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் ஆகியவை
கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா
திட்டம் கடந்த நவம்பர் மாதம் முடிந்து விடும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பணிகள் முடிவடைய தாமதம் ஆனது. தற்போது
இறுதி கட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் பிரம்மாண்ட ஹால்களில் நின்றபடி
அங்கு நடக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இந்த புதிய
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம்,
இந்தியா ஹவுஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்
உள்ளிட்டவற்றையும் கட்டப்படுகின்றன. தற்பொழுதுள்ள நாடாளுமன்றத்தில் 450
முதல் 500 உறுப்பினர்கள் வரை மட்டுமே அமர முடியும். ஆனால் புதிதாக
கட்டப்பட்டுள்ள விஸ்டா கட்டிடத்தில் குறைந்தபட்சம் 1000 உறுப்பினர்கள்
அமர முடியும், மேலும் பல உச்சகட்ட வசதிகளை இந்த பாராளுமன்ற வளாகம்
கொண்டுள்ளது.
இப்படி புதிய நாடாளுமன்றத்தை வேகவேகமாக அமைவதற்கான பின்னணிகள் உள்ள
தகவல்கள் அதிரடியாக வெளியாகியுள்ளன. வரும் 2024 மே மாதம் இந்தியாவில்