'போராட வாங்கப்பா' என கட்சியினரை கெஞ்சி அழைப்பதற்காக சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி அமைத்த வார் ரூம் - ஒரு தேசிய கட்சியின் அவல நிலை!

Update: 2023-04-05 01:54 GMT

காங்கிரஸ் கட்சி ஆட்கள் போராட்டத்திற்கு செல்கிறார்களா என வேவு பார்ப்பதற்காகவே செய்த ஒரு செயலளால் இதெல்லாம் தேசிய கட்சியா என பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது 2019ஆம் ஆண்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயரை அவதூறாக பேசியதாக இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 23) தீர்ப்பளித்தது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் அடிப்படையில் ராகுல் காந்தி விதிகளின் அடிப்படையில் எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நிபந்தனைகளின் படி ராகுல் காந்தியின் பதவி பறிபோனதற்கு தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை அறிவித்தனர். தமிழகத்திலும் காங்கிரசார் ஏதாவது போராட்டத்தை அறிவிக்க வேண்டுமே என நிர்பந்தம் ஏற்பட்டது, இதன் காரணமாகவே வேறு வெளியின்றி கும்பகோணத்தில் 4 பேருடன் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ரயிலை மறித்த வரலாற்று சம்பவம் வேறு நிகந்தது. காங்கிரஸ் கட்சியின் இத்தனை ஆண்டுகால வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் செய்திருந்தாலும் இந்த 4 பேருடன் ரயிலை மறித்த விவகாரம் முக்கியமாக பார்க்கப்பட்டது. இப்படி நாட்டை ஆண்ட கட்சி வெறும் 4 பேரை வைத்துக்கொண்டு ரயிலை மறித்தது பொதுமக்களை பார்த்து சிரிக்கும் அளவிற்கு அமைந்துவிட்டது.

இதுக்கு எதற்கு கட்சி நடத்துகிறீர்கள்? அந்த நாலு பேரும் எதுக்கு? முன்னாள் தலைவர் பதவி போனதற்க்கே இப்படி 4 பேர் போராடுறீங்களே இதுக்கு தேசிய கட்சி என பெயர் வேறு? பேசாமல் கலைத்துவிட்டு திமுகவில் சேர்ந்து விடுங்கள் என அரசியல் விமர்சகர்களால் நேரடியாகவே விமர்சனத்தை சந்தித்து வந்தனர் காங்கிரஸ் தரப்பினர். இது மட்டுமல்லாத காங்கிரஸில் இருக்கக்கூடிய தலைவர்களான கார்த்தி சிதம்பரம் போராட்டத்திற்கு வராமல் வேர்டில் விளையாடியதால் ராகுல் காந்தி அவரை நேரில் சந்தித்து கை கொடுக்காமல் போனது, காங்கிரஸ் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் தலைவர் கனவில் இருக்கும் ஜோதிமணி காணாமல் போனது, காங்கிரசில் இதற்கு முன்பு தலைவராக இருந்த திருநாவுக்கரசு இந்த போராட்டங்கள் எங்கேயும் கலந்து கொள்ளாமல் இருப்பது, சமீபத்தில் ஜெயித்த ஈ வி கே இளங்கோவன் தரப்பினரோ 'எங்க எம்எல்ஏ வந்து ஹாஸ்பிடல்ல இருக்காரு அதனால நாங்க எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறோம்' என கூறி விலகி நிற்பது, ப.சிதம்பரம் தரப்போ வெறும் விமர்சனங்களை மட்டும் கொடுத்துவிட்டு அமைதியாக இருப்பது, தங்கபாலு குழுவினரோ ஆட்கள் கட்சியில் இருக்கிறார்களே இல்லையோ என்ற சந்தேகப்படும் அளவிற்கு எதிலும் முன் வராமல் இருப்பது இப்படி பல குழுக்களாக காங்கிரஸார் பிரிந்து இருக்கும் காரணத்தினால் காங்கிரஸ் கட்சி தற்பொழுது போராட்டங்கள் கூட ஆள் இல்லாமல் அவல நிலையில் இருக்கிறது.

ஆனாலும் டெல்லி மேலிடம் இந்திய அளவில் போராட்டத்தை பெருமளவில் முன்னெடுக்க வேண்டும் அதனை யார் யார் எப்படி செய்கிறார்கள் என பார்க்கிறோம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக வேறு வழியில்லை போராட்டத்தை நாம் செய்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் செய்யும் அளவிற்கு இங்கே ஒற்றுமை இல்லை என்ற காரணத்தினாலும்,எங்கே போராடுகிறோம் என்ற பெயரில் யாரும் களத்திற்கு செல்லாமல் இருந்து விடுவார்களோ இதன் காரணமாக நமக்கு கெட்ட பெயர் ஏற்படுமோ என கே எஸ் அழகிரியின் பயத்தினாலும் தற்பொழுது கே.எஸ்.அழகிரி ஒரு அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

தற்பொழுது சத்தியமூர்த்தி பவனில் ஒரு கட்டுப்பாட்டு அறையை நியமித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒரு குழு செயல்படும், இந்த குழு தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் முன்னெடுக்க உள்ள போராட்டங்களை கண்காணிக்கவும், அந்தப் போராட்டங்களின் புகைப்படங்களை வாங்கவும், அந்த போராட்டங்கள் நடைபெறுகிறதா? என முழுதாக ஆராய அந்த குழு செயல்படும். இதற்காக காலை முதல் மதியம் முதல் ஒரு குழுவும், மதியம் முதல் மாலை வரை இன்னொரு குழுவும் என இரண்டு ஷிப்டுகளில் குழுக்களை பணியமர்த்தி அதற்கான வேலைகளை துவங்கியுள்ளார் கே எஸ் அழகிரி.

கே எஸ் அழகிரி அமைத்திருக்கும் குழுவில் சுமதி அன்பரசு, செந்தமிழ் அரசு, அகரம் கோபி, அசன்ஷெக் விஜய், சேகர், ரஞ்சித் குமார் என 20 பேர் கொண்ட குழுவினர் இறங்கியுள்ளனர் எனவும் காலையிலிருந்து மதியம் வரை 10 பேர் கொண்ட குழுவினரும் மதியம் முதல் மாலை வரை இன்னொரு 10 பேர் கொண்ட குழுவினரும் இதற்காக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் வேலை ஆனது எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த நிர்வாகிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர், அவர்கள் சரியாக போராடுகிறார்களா? அங்கு போராட்டத்தில் கூடியவர்கள் எத்தனை பேர்? அந்த போராட்டம் எந்த இடத்தில் நடைபெற்றது? அந்த போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இது போன்ற தகவல்களை எல்லாம் சேமித்து சேகரித்து தலைமைக்கு அனுப்புவது மேலும் எந்தெந்த மாவட்டங்களில் போராட்டங்கள் நடக்கவில்லை, யாரெல்லாம் போராட்டம் அறிவித்து வரவில்லை, யாரெல்லாம் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் நடக்கவில்லை, யாரெல்லாம் போராட்டத்திற்கு வராமல் இருக்கிறார்கள் என போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பவர்கள் பற்றியும் கண்காணிக்கவும் இந்த குழு செயல்படும் என சத்தியமூர்த்தி பவனில் இருந்து வரும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராடுவதற்கு ஆள் வரவில்லை, அப்படியே வந்தாலும் இருக்கும் கோஷ்டி மோதலில் ஓடிவிடுகிறார்கள் என காங்கிரஸ் மாநில தலைமையின் காரணமே இந்த கண்காணிப்பு குழு அமைக்க காரணம் என கூறப்படுகிறது. ஒரு தேசிய கட்சி இப்படி அவல நிலையில் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் என அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார். இப்படி 'போராட வாங்கப்பா ரோட்டுக்கு' என கெஞ்சாத குறையாக ஆட்களை வரவழைப்பது மட்டுமல்லாமல் அவர்கள் ஒழுங்காக வந்து போராடுகிறார்கள் என நியமிக்க தனியாக ஆட்கள் போட்டது காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பதை காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News