முதல்வர் ஸ்டாலின் என்ன கிருஸ்துவ இறை தூதரா? - எங்களுக்கானவர் அண்ணாமலை மட்டுமே! பாஜக'விற்கு படையெடுக்கும் பாதிரியார்கள்!

Update: 2023-04-13 12:30 GMT

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைய கிறிஸ்தவ சமுதாயம் தயாராகிவிட்டது.

சிறுபான்மையினர் காவலன், சிறுபான்மையினருக்கு ஆதரவாளன் எனக் கூறி திமுக கிறிஸ்தவ சமுதாயத்தை ஏமாற்றி வருகிறது! இனி முதல்வர் ஸ்டாலின் அவர்களை கிறிஸ்தவர்களின் தோழர் என கூறாதீர்கள் என கிறிஸ்தவர்கள் மத்தியில் தற்பொழுது திமுக மீது அதிக அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் திமுக சிறுபான்மையினரின் காவலன், சிறுபான்மையினரின் நண்பன், சிறுபான்மையினருக்கு ஆதரவாளர் என்பது போல் காட்டிக்கொண்டதாகவும் தற்பொழுது கிறிஸ்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் கிறிஸ்தவ சமுதாயத்தினர், குறிப்பாக திருச்சபைகளின் பாதிரியார்கள் முதல்வர் ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

தென் மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் கிறிஸ்தவ சமுதாயத்தினரை திமுக வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகிறது, எதுவும் செய்யவில்லை! திமுகவினர் கிறிஸ்மஸ் காலங்களில் அழைத்து கேக் சாப்பிட்டு நம்மளை ஓட்டு வாங்க மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனர் எதுவும் கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவதில்லை முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்காக மட்டுமே நம்மை பயன்படுத்தி வருகிறார் என்பது போன்ற பல கருத்துக்கள் கிருஸ்துவ சமுதயத்தால் கடந்த ஓராண்டாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பாதிரியார் ஒருவர் பேசிய வீடியோ இணையதளங்களில் வேகமாக வைரலாகிறது.

அந்த வீடியோவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் அவர்களே நீங்கள் விழாவிற்கு முதல்வர் ஸ்டாலினை அழைக்க விரும்பினால் கண்டிப்பாக அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டருக்கு டாஸ்மார்க் விடுமுறை விடுங்கள் என நாம் கேட்டோம், பாஜக, நாம் தமிழர் போட்ட கட்சிகள் கேட்டும் கூட மதுக்கடைகளுக்கு விடுமுறை விடவில்லை அந்த அளவிற்கு கிறிஸ்தவ சமுதாயத்தை அவர் பொருட்படுத்தவில்லை.

அப்படி முதல்வர் ஸ்டாலினை மட்டும் அழைத்து விழாவை கொண்டாட வேண்டும் என்றால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் அனைத்து விழா கொண்டாட வேண்டும்! திமுக மட்டும் என்ன ஸ்பெஷல் அவர்கள் வாக்குக்காக பயன்படுத்துகிறார்கள், நீங்கள் அதையும் மீறி ஸ்டாலினை மட்டுமே அழைத்து கிறிஸ்தவ விழாவை கொண்டாடினால் அண்ணாமலை தலைமையில் நாங்கள் பாஜகவில் இணைவோம் என பேசியது தற்பொழுது இணையத்தில் மிகுந்த வைரலாகி வருகிறது.

கிறிஸ்தவ சமுதாயம் விழித்துக் கொண்டது, அண்ணாமலை தலைமையில் பாஜகவில் பெரும்பாலான கிருஸ்துவர்கள் இணைய முடிவு செய்துவிட்டனர்

Similar News