பேரணிக்கு அனுமதி தீர்ப்பு வந்த கையோடு ஆட்டத்தை துவங்கிய ஆர்.எஸ்.எஸ் - 'ஆப்ரேசன் தமிழ்நாடு' ஆரம்பம்
இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என ஆர்எஸ்எஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.
2022 அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று 50 இடங்களில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த 2022 செப்டம்பர் 22ஆம் தேதி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது உத்தரவையும் மீறி தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. அதனால் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் விளைவாக ஆறு இடங்கள் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு ஆர்எஸ்எஸ் பேரணி உள்அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அமர்வில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இத்தனை கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு சுற்றுச்சூழுடன் கூடிய மைதானங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது.
ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு பேரணி அமைதியான முறையில் நடைபெறுவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். ஆனால் உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரித்த ராமசுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்தகி, உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க முடியும் ஆனால் அதை எதையும் கவனிக்காமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு கட்டுப்பாடுகள் இல்லாத பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது ஏற்க முடியாது என்று வாதிட்டார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, மத்திய அரசுக்கு எதிரான ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளின் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு ஆர் எஸ் எஸ் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்க மறுக்கிறது, மேலும் தமிழ்நாடு அரசு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்றும் வாதிட்டார். அதாவது உண்மையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்ததால் எங்களது பேரணிக்கு தான் அச்சுறுத்தல் ஏற்படலாம், அதற்காக தமிழ்நாடு அரசு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமே தவிர ஆர்எஸ்எஸ் பேரணியை தடுக்க கூடாது என்றும் வாதிட்டார்.