'அமலாக்கத்துறை வந்துதான் பார்க்கட்டுமே' எனக்கூறி முதல்வரை சிக்க வைத்த ஆர்.எஸ்.பாரதி - டெல்லியில் இருந்து இறங்கும் ரைடு!

Update: 2023-04-15 13:55 GMT

'எங்கே அமலாக்கத்துறை வரட்டுமே என கூறி அமலாக்கத்துறையை உசுப்பேற்றி விட்டார் திமுகவின் ஆர் எஸ் பாரதி.

தற்பொழுது தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது, அதற்கு காரணம் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை. அண்ணாமலையின் வாட்ச் விவகாரத்தை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்த திமுகவை திருப்பி சொத்து பட்டியல் மூலம் ஒரே அடியாக அடித்துள்ளார் அண்ணாமலை என பாஜகவினர் தற்பொழுது பெருமைப்பட்டுவருகின்றனர். அண்ணாமலை தற்பொழுது திமுகவில் உள்ள தலைவர்களின் சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார், இது தொடர்பாக செய்தியாளர்களை கமலாலயத்தில் சந்தித்து பேசியவர், “நான் திமுகவுக்கு சவால் வைத்தேன். என் பில் மட்டும் இல்ல. திமுக ஊழலையும் வெளியிடுகிறேன். நான் கேள்வி கேட்கும் நேரம் இது.எனவே ஒரு வாரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன். எனக்கூறி திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அந்த பட்டியலில் கனிமொழிக்கு 830 கோடி மதிப்புள்ள சொத்தும், எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு 50,219 கோடி மதிப்புள்ள சொத்தும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு 5,442 கோடி மதிப்புள்ள சொத்தும், கலாநிதி வீராசாமிக்கு 2,923 கோடி மதிப்புள்ள சொத்தும், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணிக்கு 581 கோடி மதிப்புள்ள சொத்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு 2,039 கோடி மதிப்புள்ள சொத்தும், முதல்வர் மருமகன் சபரீசனுக்கு 902 கோடி மதிப்புள்ள சொத்தும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 1,023 கோடி மதிப்புள்ள சொத்தும், மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கு ரூ.200 கோடிக்கு ஆல்ஸ்டாம் கம்பெனி மூலமாக லஞ்சமாக என்ற தகவலையும் வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு விவகாரம் திமுக தலைவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, 'அண்ணாமலையின் குற்றச்சாடுகளைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்பு தான் வருகிறது. நல்ல நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார். திமுக-வுக்கென தனியாக ரூ.1408 கோடிக்குச் சொத்து இருப்பதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதில் பள்ளிகள், கல்லூரிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். எங்களுக்குத் தெரியவேண்டியதெல்லாம் அதற்கான ஆதாரம் என்ன? அந்தப் பள்ளிகள், கல்லூரிகள் எங்கு செயல்படுகிறது, எத்தனை இருக்கிறது உள்ளிட்ட தகவல்களை, 15 நாள்களுக்குள் அண்ணாமலை தி.மு.க அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி என அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரே நாளில் எம்.பி பதவியை பறிக்கும் அளவு சக்தி படைத்த பா.ஜ.க அரசு ஏன் இதுவரை முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

அமலாக்க துறை ஊழல் பற்றிய தகவல் கிடைத்தால் அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்றும் அந்த தகவல் அடிப்படை என்ன என்பது போன்ற விவரங்களை விசாரிக்க தனியாக இறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் கூறுகையில், டெல்லியில் இருந்து வரும் தகவல்களைத்தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்' என கூறியுளளார். அப்படி இருக்கையில் ஒரு முன்னாள் சிவில் அதிகாரி கண்டிப்பாக ஆதாரங்கள் இல்லாமல் கூறமாட்டார் எனவும், ஆதாரங்களை கண்டிப்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வசம் ஒப்படைப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் ஆர்.எஸ்.பாரதி வேறு ஏன் அமலாக்க துறை நடவடிக்கை எடுக்கவில்லை என உசுப்பேற்றிவிடும்படி கூறியது அமலாக்க துறைக்கு வாய்ப்பாக அமையும் என தெரிகிறது.

எனவே வரும் வாரங்களில் அமலாக்கத்துறை தனது விசாரணையை துவக்கலாம் எனவும், அப்படி துவங்கினால் முதலில் கனிமொழி, ஜெகத்ரட்சகன், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது விசாரணை நடத்தலாம் எனவும் மூத்த அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலைக்கு எதிர் கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினை அமலாக்கத்துறையுடன் சிக்கவைத்து ஆர் எஸ் பாரதி மீது தற்பொழுது திமுக தரப்பில் மிகுந்த கோபத்தில் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

Similar News