இடதுசாரிகள் கிடக்குறாங்க! நான் இருக்கேன் கவலையை விடுங்க - பிரதமர் மோடியிடம் சமாதானத்தில் முதல்வர் ஸ்டாலின்

Update: 2023-04-18 12:38 GMT

கடந்த முறை சென்னை விஜயத்தின் போது பிரதமர் மோடியை சிரித்து சிரித்து வரவேற்ற ஸ்டாலின் அடுத்த முறை எப்பொழுது பிரதமர் மோடி வருவார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 8ம் தேதி சென்னை வருகை புரிந்த பிரதமர் சென்னை - பல்லாவரம் அல்ஸ்தம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மதுரையில் கட்டப்பட்டுள்ள 7.3 கி.மீ. நீள மேல்மட்டச் சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 785-ன் 24.4 கி.மீ. நீள 4 வழிச்சாலை ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இதனைத் தவிர்த்து, தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம் பள்ளி இடையிலான ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம் பள்ளி இடையே 37 கி.மீ. அகல ரயில்பாதைத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனிருந்தார்.

அன்றை தினத்தின் போது பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிக நெருக்கம் காட்டியதும், இணக்கமாக இருந்ததும் திமுகவினருக்கே ஆச்சர்யமாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கருப்பு கொடி, கருப்பு பலூன் பறக்கவிட்டு, கோ பேக் மோடி என கூறிய திமுகவின் தலைவரா இப்படி பிரதமர் மோடியின் கையை விடாமல் சிரித்துக்கொண்டு பேசி வருகிறார் என இடதுசாரிகள் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இப்படி பிரதமர் மோடி விஜயத்தின் போது கூட்டணி கட்சிகளை பற்றியும் தனக்கு ஆதரவளித்தவர்கள் பற்றியும் கவலைப்படாமல் பிரதமர் மற்றும் பாஜகவினருடன் முதல்வர் ஸ்டாலின் நெருக்கம் காட்டியது அப்பொழுது இடதுசாரிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த திறப்பு விழாவின் சமயத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று தற்பொழுது வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்கும் பொழுது பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஸ்டாலினும் அருகே இருந்துள்ளார் மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அப்பொழுது பிரதமரிடம் பரந்தூர் விமான நிலையத்தை பற்றி முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

அப்போது அருகில் இருந்த மத்திய விமானத்துறை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதி ஆதித்யா சிந்தியா முதல்வர் ஸ்டாலினுக்கு, 'பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் வேலை முடிந்துவிட்டது. விரைவில் ரன்வேயை அமைக்கும் வேலைகள் துவங்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பரந்தூர் விமான நிலையம் ஒரு நிலைக்கு வந்துவிடும்' என்று கூறினாராம். இதை கேட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லையாம், மேலும் வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இந்த விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்ததும் முதல்வர் ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாராம். உடனே அருகில் இருந்த பிரதமர் மோடி 'இந்த விமான நிலையம் முதல்வர் ஸ்டாலினின் 'பெட் ப்ராஜெக்ட்' எனக் கூறியதும் அதனை கேட்டு ஆமோதித்து சிரித்துக்கொண்டே பிரதமரிடம் மகிழ்ச்சியை தெரிவித்தாராம் முதல்வர் ஸ்டாலின்.

எதிர்க்கட்சியாக இருந்த சமயம் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு, மறுபுறம் கோ பேக் மோடி என எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பு தற்பொழுது பிரதமர் அடுத்து பரந்தூர் விமான அடிக்கல் நாட்டுவிழாவிற்கு எப்போது வருவார் என காத்துகொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Similar News