வாயை வச்சுகிட்டு சும்மா இருக்கனும் - அறிவாலயத்தில் திருமாவளவன் மிரட்டப்பட்டாரா?
அறிவாலயத்தில் திருமாவளவருக்கு டோஸ் விழுந்ததா?
திருமாவளவன் அடிக்கடி திமுக கூட்டணியில் இருப்பதா வேண்டாமா என்கிற மனநிலையில் இருந்து வருகிறார்! கடந்த மாதங்களில் நடந்த ஆளுநரின் எதிர்ப்பு போராட்டத்தில் கூட திருமவளவனைத்தான் திமுகவினர் ஏவி போராட வைத்தனர், வேங்கை வயல் விவகாரத்தில் கூட பட்டியலின மக்களின் பாதுகாவலன் என கூறும் திருமாவளவன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கூட திருமாவளவன், பதவி என்பது என் தலை முடிக்கு சமம் என்று கூறியது திமுகவினருக்கு கொடுத்த பதிலடியே தவிர பாஜகவிற்கு கிடையாது. இப்படி திருமாவளவன் திமுகவுடன் பிடிக்காமல் கூட்டணியில் இருந்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் திருமாவளவன் கோபம் அடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை 100 நாட்களாகியும் கண்டுபிடிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது திமுக அரசு, ஆனால் இது தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இதில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியது திமுக அரசு. இந்த விவகாரம் தொடர்பாக திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அப்பொழுது ஒரு விசாரணையில் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத நிலை ஏற்படலாம் அதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அர்த்தம் கிடையாது என்று திருமாவளவன் பேசி வந்த பொழுது நீங்களும் திமுக காரர் போல பேசுகிறீர்களே என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார், அப்பொழுது திடீரென கோபம் அடைந்தது திருமாவளவன் நான் திமுக காரனா, உங்கள் முன்பு என கைகட்டி பேச வேண்டுமா பொதுவெளியில் பேசும் பொழுது நாகரிகம் அவசியம் இப்படி நாகரீகம் இல்லாமல் நீங்கள் பேசுவது தவறு என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார் திருமாவளவன்.
நான் திமுக காரனா என்று கோபமடைந்த அடுத்த நாளே, திமுகவுடன் எங்களுடைய கூட்டணி வலுவானது என்று திருமாவளவன் கூறியுள்ளார், பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்ட திருமாவளவன் அடுத்த நாளே திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசியவர், 'பி.வி.சிங்கிற்கு தமிழகத்தில் உருவ சிலை வைப்பது வரவேற்கத்தக்கது, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுத் தருவதற்கு தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் ஒன்று நிறைவேற்றியுள்ளார் அதை நாங்கள் முழுவதுமாக வரவேற்கிறோம், சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மயில் கல் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருமாவளவன் மேலும் பேசிய அவர், திமுக தலைமையிலான தங்களது கூட்டணி வலுவான கூட்டணி மேலும் இந்த கூட்டணியில் எந்த ஒரு சிக்கலும் கிடையாது, அதோடு விடுதலை சிறுத்தைகளுக்கும் திமுக விற்கும் இடையே இருப்பது நட்புணர்வு கொள்கை சார்ந்த உணர்வு. ஆதலால் தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல் சமூக நீதிக் களத்திலும் நாங்கள் தொடர்ந்து இணைந்து பயணிக்க தேவையான வலுவை பெற்றிருக்கும் கூட்டணி எங்களது கூட்டணி. ஆதலால் நாங்கள் தொடர்ந்து திமுக கூட்டணியில் பயணிக்க உள்ளோம் தற்பொழுது கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலும் காங்கிரசுக்கு முழு ஆதரவு அளிக்க உள்ளோம், என்று திமுக உடனான தனது கூட்டணி வலுவானது என்று தனது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரான திருமாவளவன்.