திமுக வளரவில்லை என்பதற்காக கொங்கு மக்களை குடிநீருக்கு கையேந்த வைக்க திட்டமா? - வெளிவந்த பகீர் தகவல்
தண்ணீருக்காக கோவை மக்களை அலைய விட திமுக அரசு தயாராகிவிட்டது என தகவல்கள் கிடைத்துள்ளன.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், நீலமலை அரசி பெருமைகளோடு உலகின் இரண்டாவது சுவை மிகுந்த சிறுவாணி குடிநீரை கொண்ட மாவட்டம் தான் கோவை. 1927 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் மெட்ராஸ் மாகாணத்தில் மிகவும் மோசமான தண்ணீர் எதுவென்றால் அது கோயம்புத்தூரில் இருந்து பெறப்படும் தண்ணீர் தான் என்று குறிப்பிட்டு இருந்தார், இந்த பெயரை மாற்றுவதற்காகவே 40 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னால் சிறுவாணி தண்ணீர் கோவை நகரத்திற்கு வந்தது. கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையிலும் சிறுவாணி ஆற்றின் தண்ணீர் திகழ்ந்து வருகிறது விவசாயிகளின் பெரும் நம்பிக்கையை சிறுவாணியாறு பெற்றுள்ளது. கோவை மக்களின் குடிநீருக்கு பிரதானமாக விளங்குவதும் சிறுவாணி ஆறுதான் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார மக்களின் சிறுவாணி தண்ணீரை தான் பயன்படுத்துகின்றனர். இப்படி கோவை மக்களின் குடிநீருக்கு அஸ்திவாரமாக விளங்கும் சிறுவாணி தண்ணருக்கு தற்பொழுது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன பாதிப்பு என்றால்? சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது அதாவது சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அட்டாப்பாடி கூலிக்கடவு - சித்து சாலையில் நெல்லிப்பது என்ற இடத்தில் கேரளா அரசு 5 அடி உயரத்தில் தடுப்பணைகளை கட்டிவருகிறது. மேலும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே இரண்டு மூன்று தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மழைக்காலங்களில் சிறுவாணி அணையின் முழு கொள்ளளவை எட்ட விடாமல் கேரள அரசு தடுத்து வருகின்ற நிலையில் கோடை காலத்தில் வரக்கூடிய தண்ணீரையும் தடுப்பணைகளை கட்டி சிறுவாணி அணைக்கு தண்ணி வராமல் தடுக்கப்படும் என்று விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர், சிறுவாணி ஆறும், பவானி ஆறும் காவிரி ஆற்றின் கிளை ஆறுகள் ஆகும். ஆதலால் இங்கு தடுப்பணைகளை கட்டுவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்திடம் கேரளா அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும் ஆனால் காவேரி மேலாண்மை வாரியத்திலும் அனுமதி பெறாமல் இந்த தடுப்பணைகளை கேரளா அரசு கட்டி வருகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இப்படி சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டினால் கோவை மக்களுக்கு தொடர்ச்சியாக சிறுவாணி ஆற்றில் இருந்து பெறப்படும் குடிநீரின் தட்டுப்பாடுகள் ஏற்படும், இதனால் அப்பகுதி மக்கள் அவர்கள் குடிக்கும் நீரையும் காசு கொடுத்து கேனில் வாங்கும் நிலைமை ஏற்படும், ஆதலால் இந்த தடுப்பணைகளை தடுக்க தமிழக முதல்வர் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என்று கோவை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், கேரளாவிற்கு முதல்வர் மு க ஸ்டாலின் முலை வரி போராட்டத்திற்காகவும் அதற்கு பிறகு தற்பொழுது கூட வைக்கம் போராட்டத்தின் நினைவு நாளிற்கும் சென்று வந்துள்ளார். இப்படி கேரள முதல்வரிடம் விழாக்களுக்கு சென்று உறவாடி வந்த முதல்வர் ஸ்டாலின் இந்த நாள் வரை சிறுவாணி அணையில் கட்டப்பட்டு வருகின்ற தடுப்பணைகள் தொடர்பாக கேரள அரசிடம் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை, கேரளா அரசு தன் இஷ்டம் போல் தடுப்பணைகள் கட்டும் பணியில் இறங்கி தனது வேலைகளை செய்து வருகிறது. இப்படி தனக்கு வாக்களிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கோவை மக்களை முதல்வர் ஸ்டாலின் வஞ்சிப்பதாக கோவை மக்கள் நினைக்கும் அளவிற்கு தற்போது சிறுவாணி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
கேரளா அரசு நினைக்கும்படி சிறுவாணி தண்ணீர் வரும்வழியில் குறுக்கே 3 அணைகள் கட்டிவிட்டால் கோவை மக்கள் குடிக்க தண்ணீருக்கு சென்னை, ராமநாதபுரம் போன்று அலையும் நிலை ஏற்பட்டுவிடும் என இப்பொழுதே பயப்படத்துவங்கிவிட்டனர்.