யார் இந்த திமுக எம்எல்ஏ மோகன்? குறிப்பாக இவர் வீட்டுக்கு வருமான வரித்துறையினர் ரைடு செல்வதற்கான காரணம் என்ன?
தமிழ் வருட பிறப்பின் ஆரம்பம் முதல் திமுகவிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது, தமிழ் வருட பிறப்பான ஏப்ரல் 14 அன்றே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிட்டார் அந்த சர்ச்சை முடிவதற்குள்ளையே அடுத்ததாக திமுக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார் அண்ணாமலை. அந்த ஆடியோ பதிவில் முதலமைச்சரின் மகனான உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் ஊழல் பற்றியும் அதை எப்படி பாதுகாப்பது மாட்டிக்கொள்ளாமல் எப்படி தப்பிப்பது என்று பி டி ஆர் பேசியது இடம்பெற்று இருந்தது.
ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய போதிலும் தொடர்ந்து அமைதி காத்து வந்த பிடிஆர் ஆடியோ வெளியாகி கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை என்றும் வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் மூலம் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதற்கு, அந்த ஆடியோவில் உள்ள கருத்துக்களைப் போன்று என்னுடைய குரலில் மாற்றி அமைத்து தாருங்கள் என்று அண்ணாமலை கேட்ட பிறகு தனது மறுப்பில் இருந்து பின்வாங்கி மறுபடியும் அமைதி நிலைக்கே சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலை தனது பாஜக மாநில தலைமை குழு மூலம் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜரின் ஆடியோ குறித்த விவகாரம் பற்றி ஆளுனரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் உரிய தணிக்கை விசாரணையை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.
இந்தக் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டது அதாவது பாஜக மாநில தலைமை குழு தனது கோரிக்கையை முன்வைத்து வந்த பிறகு அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கே ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த நிறுவனம் அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியலில் இடம் பெற்றிருந்தது.இச்சம்பவத்தில் முக்கியமாக புகார் தெரிவிக்கப்பட்ட அடுத்த நாள் அதிகாலையிலேயே சென்னை அண்ணா நகரில் உள்ள திமுக எம்எல்ஏவான மோகன் வீட்டில் முதல் ரெய்டு இறங்கியது, வேறு எங்கும் ரெய்டு இறங்காமல் முதலில் இவர் வீட்டிற்கு ரைடு நடத்தியதன் காரணமும் பின்னணியும் என்ன?