உதயநிதி, சபரீசனை வசமாக சிக்கவைத்த பி.டி.ஆர் - இறங்கும் சி.பி.ஐ

Update: 2023-04-27 07:28 GMT

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உதயநிதி மற்றும் சபரீசனை வசமாக கோர்த்து விட்டுள்ளார் சிபிஐ'யிடம்.

கடந்த தமிழ் புத்தாண்டு அன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக தலைவர்களின் சொத்து பட்டியலில் முதற்கட்டமாக வெளியிட்டார், அப்படி முதல் கட்டமாக வெளியிட்டதே ஒன்னரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் உதயநிதி சபரீசன் ஆகிய இருவரும் சேர்ந்து முப்பதாயிரம் கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்துள்ளார்கள் என்ற தகவலை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பத்திரிகையாளர் ஒருவரிடம் கூறுவது போல் இருந்தது.

அதனை அடுத்து பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த ஆடியோ வெளியானதும் ஏதோ மறுப்பு அறிக்கையோ அது நான் இல்லை எனவோ தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஆனால் இரண்டு மூன்று தினங்கள் கழித்து பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்ற போகிறோம் என முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் பேச்சுக்கள் அடிபட்ட பொழுது எங்கே பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 'இந்த ஆடியோவில் பேசியது என்னுடைய குரல் அல்ல அது தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டது என சமாளித்து பார்த்தார்.

ஆனால் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் பொழுது வருமான வரித்துறையினர் உதயநிதியின் நண்பரும் திமுக எம்எல்ஏவும் ஆன அண்ணா நகர் மோகன் வீட்டில் சோதனையில் இறங்கினர். அந்த சோதனை இரண்டு தினங்களாக நடந்து வரும் நிலையில் அந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன அது உதயநிதிக்கு சம்பந்தமாக இருக்கிறதா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்து வரும் நிலையில் வருமானவரித் துறையில் இருந்து இன்னும் அதுகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் சிபிஐ இடம் மேலும் ஒரு அதிரடி புகார் உதயநிதி மற்றும் சபரீசன் மீது சென்றுள்ளது. முதல்ல ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் மீது நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என அதிமுக தரப்பில் இருந்து சிபிஐ அலுவலகத்தில் அதிரடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பாபு முருகவேல் இவர் அதிமுக வழக்கறிஞர் இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம், பாரிமுறையில் உள்ள மத்திய விஜிலன்ஸ் கமிஷன் அலுவலகத்திற்கு நேற்று தபால் வாயிலாக புகார் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த புகாரில், 'தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது அதில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் அவரது மகன் அமைச்சருமான உதயநிதி ஆகியோர் முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் முறைகேடாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறுகிறார் அதுபோல் மீண்டும் தியாகராஜன் பேசுவது போல் ஆடியோ வெளியாகி உள்ளது அதிலும் சபரீசன் உதயநிதி உள்ளிட்டோர் ஊழல் செய்து பல கோடி ரூபாய் குவித்து வைத்துள்ளதாக கூறுகிறார் அந்த ஆடியோவில் பேசுவது தியாகராஜன் தான் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து உதயநிதி, சபரீசன் உள்ளிட்டோர் ஒரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உதயநிதி, சபரீசன் ஆகியோர் இருவரின் நெருக்கமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வரும் வேலையில் சிபிஐ வசம் தற்பொழுது புகார் சென்று இருப்பது திமுக தரப்பை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதன் காரணமாக அடுத்தபடியாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அனைத்து பிரிவுகளும் ரெய்டில் இறங்கினால் என்ன நடக்குமோ என அறிவாலய தரப்பு பயத்தில் உள்ளது.

Similar News