ஆளுநர் ஆர் என் ரவி, எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் மூவரும் டெல்லி செல்லும் நிலை என்ன?
தமிழக அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் கிளப்பியது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் தான், முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகன் ஆகிய இருவரும் சேர்ந்து 10 கோடி, 20 கோடி என தற்போது முப்பதாயிரம் கோடி அளவிற்கு குவித்துள்ளதையும் அதை எப்படி மாட்டிக் கொள்ளாமல் வைப்பது என்று தவிக்கின்றனர் என பி டி ஆர் புலம்பிய ஆடியோ ஒன்றை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு இரண்டு மூன்று நாட்களுக்கு அமைதி காத்து வந்த பிடிஆர் ஆடியோ வெளியாகி நான்கு நாட்களுக்குப் பிறகே ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல என்று தெரிவித்திருந்தார். மேலும் இதில் எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம் எனவும், தொழிநுட்பத்தை வைத்து போலியாக உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். பிடிஆரின் இந்த பதிவிற்கு அண்ணாமலை எனது குரலில் இந்த ஆடியோவில் உள்ள கருத்துக்களை போலியாக உருவாக்கி தாருங்கள் என்று கேட்டதற்கு பிறகு பி டி ஆர் இடம் எந்த பதிலும் இல்லை.
அவரின் முதல் ஆடியோ வெளியாகி பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே யாரும் எதிர்பார்க்காத விதமாக பிடிஆரின் இரண்டாவது புலம்பல் ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டார். அந்த ஆடியோ பதிவில் கட்சி மற்றும் மக்களை பாதுகாப்பதற்கு தனி தனி பதவிகளை கொண்ட மனிதர்கள் இருக்க வேண்டும் அதனை பாஜக செய்கிறது, இக்கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுமே அனைத்து முடிவுகளை எடுக்கிறார்கள் மேலும் இதில் கட்சியே முதல்வரின் மகன் மற்றும் மருமகன் மட்டுமே. அவர்களுக்கு வரும் ஊழல் பணத்தை அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள் என்று 57 நொடிகள் ஓடியது அந்த ஆடியோ. முதல் ஆடியோ வெளியானதுமே அதன் உண்மை தன்மையை விசாரிக்க வேண்டும் என பாஜக தலைமை குழு ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் 50 முக்கிய இடங்களில் வருமான வரித்துறையினர் திங்கட்கிழமை அதிகாலையிலேயே ரெய்டை தொடங்கினார். மேலும் இந்த வருமானவரித் துறையினரின் ரெய்டு நான்கு நாட்களாக நீடித்து வருகின்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் தற்போது இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார்.
டெல்லி சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி ஒருமுறை முதல்வர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது இதற்கு முன்னதாக திரௌபதி மூர்மு தமிழகத்திற்கு வந்த பொழுது நேரில் சென்று வரவேற்க முடியாத ஸ்டாலின், தற்போது அவரை அழைப்பு விடுப்பதாக கூறி நேரில் சென்று குடியரசு தலைவரை சந்திக்க உள்ளார். ஆனால் முதல்வருக்கு முன்னாள் முதலில் தமிழக ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். மேலும் இந்த பயணம் தனிப்பட்ட பயணமாக இருக்கும் என்று ஆளுநர் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த பயணத்தின் பொழுது மத்திய அரசில் உள்ள முக்கிய தலைவர்களை சந்திப்பதற்காக நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் தற்போது டெல்லி சென்றுள்ளார். பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் உறுதியாகி உள்ளது. ஆனால் இபிஎஸ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்டுள்ள மோதலால் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணியில் ஒரு நிலைப்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. இந்தக் காரணங்களுக்காக பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடக்கும் ரைடு விவகாரத்தின் காரணமாக தற்போது மூவரும் டெல்லி பயணம் சென்றுள்ளனர். மேலும் இதற்கு அடுத்து பி டி ஆரின் அடுத்த ஆடியோக்கள் வெளிவராத வண்ணம் இருக்கும்படி டெல்லியில் சிலரை சந்தித்து பேச இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.