தொடர் ரெய்டு - 'ஆளை விடுறா சாமி' என பதுங்கிய ரெட் ஜெயண்ட் மூவீஸ்

Update: 2023-04-29 01:00 GMT

தொடர் ரைடு மற்றும் வாரிசு, துணிவு ஆகிய படங்களில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதுங்கி நிறுவனம் உள்ளது.

முதல்வரின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். இதுவரை ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயமானதிலிருந்து 61 படங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன, அதில் சில படங்கள் சொந்தமாக தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 30 படங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது திரையுலகில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆதிக்கம் குறைவாக இருந்தது ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்களை வெளியிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டிற்கு பிறகு திரையுலகில் கிட்டத்தட்ட 80 சதவிகித படங்கள் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் மட்டுமே திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன எனவும் திரையரங்குகள் அனைத்துமே ரெட் ஜெயண்ட் மூவிஸ் ன் கட்டுப்பாட்டுகள் இருக்கின்றன எனும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் ஆடம்பர சொகுசு கார் கூட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களையும் வெளியிட அதிகாலை 2:00 மணி காட்சிக்கு ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன எனவும் அதன் காரணமாக சென்னையில் ஒரு இளைஞன் மரணம் அடைந்தார் எனவும் பல்வேறு புகார்கள் பொதுவெளியில் எழுந்தன. இதனை தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களுக்கும் திமுக தனது ஆட்சியில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு அதிகாலையில் அனுமதி கொடுத்து வசூலை குவித்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது, மேலும் திரையரங்க டிக்கெட்டுகள் 1000 ரூபாய், 2000 ரூபாய் என ஆயிர கணக்கில் விற்கப்பட்டுள்ளன ஆனால் இது முறை கிடையாது 200 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்கக் கூடாது இவை எல்லாத்துக்கும் காரணம் அமைச்சர்கள் உதயநிதி யின் நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்கிற நிறுவனம் தான் இதனை விசாரிக்க வேண்டும் என ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.

இந்த புகார் ஆளுநர் பார்வையில் தற்பொழுது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. ஏற்கனவே வாரிசு, துணிவு ஆகிய இரு படங்களின் புகார்கள் ஆளுநர் மேசையில் இருக்கும் பொழுது தற்பொழுது வெளியான பொன்னியின் செல்வன் படத்தையும் அதிகாலையில் திரையரங்கில் ஒளிபரப்பினால் கண்டிப்பாக பிரச்சனை எழும் என தெரிந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் அதிகாலை பொன்னியின் செல்வன் படத்தை ஒளிபரப்பாமல் நிறுத்தி வைத்துள்ளது.

இது மட்டுமல்ல தற்பொழுது கடந்த ஒரு வாரமாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமான சில இடங்கள் உட்பட கிட்டத்தட்ட 50 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். இப்படி 50 இடங்களில் ஆரம்பித்த சோதனை பின்னர் 60 இடங்களாக நீடித்தது. இப்படி சோதனை அதிரடியாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் முதல்வர் ஸ்டாலினும் அவரது மருமகன் சபரீசனம் முப்பதாயிரம் கோடி ரூபாய் வரை பணத்தை குவித்துள்ளனர் என திமுகவின் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஒப்புக்கொண்ட ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே துணிவு வாரிசு படங்களில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஒளிபரப்பப்பட்ட காட்சிகளின் புகார்கள் வேறு இருக்கிறது, மேலும் வருமானவரித்துறை ரெய்டு வேறு நடந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் பி டி ஆர் இன் ஆடியோ வேறு எந்த நேரம் வேண்டுமானாலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது.

தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இதேபோல் நாம் அதிகாலை ஷோ வெளியிட்டு வசூலை குவித்தால் அது நமக்கு பிரச்சினையாக முடியும் என தெரிந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தற்பொழுது பதுங்கி உள்ளது. இது மட்டுமல்லாமல் முதல் முதல்வர் ஸ்டாலின் தொடர் நடந்து வரும் நிலையில் டெல்லி செல்லவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News