பதவி பறிபோகும் என பயந்து தஞ்சை பெரியகோவில் விழாவிற்கு செல்லாமல் தெறித்து ஓடிய திமுக அமைச்சர், எம்.எல்.ஏ'க்கள்!
தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தில் பயத்தினால் கலந்து கொள்ளாமல் சென்ற திமுக எம்எல்ஏக்கள்!
தஞ்சை பெரிய கோயில் என மக்களால் அறியப்படும் தஞ்சை பெருவுடையார் கோவில் தஞ்சாவூரில் உள்ள காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்தியாவுல உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாவும் அறிவிக்கப்பட்ட இந்த சிவன் கோயில கட்டியது முதலாம் ராஜராஜ சோழன். ஆண்டுகள் பல கடந்த பின்பும் கம்பீரமாக நிற்கும் இந்த தஞ்சை பெரிய கோயிலை பார்ப்பதற்கு உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தினமும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
இப்படி அயல்நாட்டினர் கூட வியப்பாக பார்க்கிற தமிழர்களின் கட்டடக் கலைக்கு பெருமை சேர்க்கும் இந்த கோவில் தமிழக ஆட்சியாளர்களுக்கு மட்டும் எப்பவுமே பிடித்தமான கோயிலா இருந்ததில்லை. இதுக்கு காரணம் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளுக்கு இடையே நிலவும் சென்டிமென்ட் தான்.
இந்த செண்டிமெண்ட் மைண்ட்ல வச்சுக்கிட்டு தான் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற தஞ்சாவூர் சித்திரை திருவிழா தேரோட்டத்துல திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததாக சர்ச்சை எழுந்திருக்கு. இந்த செண்டிமெண்ட் பட்டியல்ல முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஏன் ? முன்னாள் ஜனாதிபதிகள் ஜெய்சிங், எஸ்டி சர்மா கூட இருந்துருக்காங்க.
இப்படி வரலாற்று சிறப்புமிக்க உலகப் பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் செல்வதற்கு இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டும் பயன் தரக்கூடிய அந்த செண்டிமெண்ட் என்னன்னா?, ராஜராஜ சோழன் நுழைவாயில் வழியாக, பெருவுடையாருக்கு எதிரே வந்து தரிசிப்பவர்கள் பிரபலமானவராக இருந்தால் அவர் பதவியோ இல்ல உயிரோ பறிபோகும் என்பது தான் அந்த செண்டிமெண்ட் . இது நம்பதகாததாக இருந்தாலும் சில நிகழ்வுகள் இந்த அரசியல் தலைவர்களை பயப்பட வைக்கிறது.
1976 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜனுடைய சிலையை வைக்க வேண்டும் என மத்திய அரசிடம் அனுமதி கேட்டார், அந்த அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்துல கோயிலுக்குள்ள வராகி அம்மனுக்கு புது மண்டபம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த நினைத்தார்கள். ராஜராஜனோட சிலையை வைக்கக்கூடாது வராகி அம்மனுக்கு புதிதாக மண்டபம் மட்டும் கட்டலாமா? என திமுக தரப்பினர் எதிர்க்கவே மத்திய அரசு மண்டபத்தை இடிக்கும்படி உத்தரவிட்டது. இந்த பிரச்சனைக்கு பிறகு கலைஞர் கருணாநிதி அரசு தரப்பில் பல பிரச்சனைகளை சந்தித்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் கூட செய்யப்பட்டுச்சு, இதுல குறிப்பிடத்தக்க விஷயம் என்னன்னா வராகி அம்மனோட புதிய மண்டபம் இடிக்கப்பட்ட அதே நாளில் தான் ஜனவரி 31,1976 அன்று திமுகவோட ஆட்சி வந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த எமர்ஜென்சி வந்து அடுத்த தேர்தல்ல வராகி அம்மனோட மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திரா காந்தியும் தோற்றுப் போய் அவரது ஆட்சியும் போனது. இதுவே தஞ்சை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட இரண்டு தலைவர்களின் முதல் நிகழ்வாகும்.