அய்யோ பத்தாயிரம் கோடி சொத்தை இப்படி வெளியிட்டாரே - தஞ்சை வீதியில் டி.ஆர்.பாலுவை புலம்ப வைத்த அண்ணாமலை!

Update: 2023-05-04 07:52 GMT

அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்டாரே என்ற கோபத்தில் என் காலை தொட்டவன் அண்ணாமலை தலையை மிதிப்பேன் என திமுக எம்பி ஆவேசமாக பேசியது சர்ச்சை எழுப்பியுள்ளது!

திமுக அமைச்சர்கள் நிர்வாகிகளின் சொத்து ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட 12 பேரின் சொத்து பட்டியல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில விவரங்களை வீடியோ பதிவாக வெளியிட்டார். மேலும் தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்களையும் அதன் பில்லையும் வெளியிட்டார்.

திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எ.வ. வேலு, பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி, உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள் கனிமொழி, கலாநிதி வீரச்சாமி, ஆற்காடு வீரசாமி, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிரானந்த், டி.ஆர்.பாலு, மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய ஆகிய 12 பேரின் சொத்து விவரங்களை முதற்கட்டமாக வெளியிட்டதாகவும் மேலும் விவரங்களை பின்னர் அறிவிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட பட்டியலில் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜெகத்ரட்சன், கே.என். நேரு, எ.வ. வேலு, கலாநிதி மாறன்,டி.ஆர்.பாலு, கலாநிதி வீரசாமி, கதிர் ஆனந்த், உள்ளிட்டோர்களின் சொத்து கிட்டத்தட்ட சொத்து மதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி என தெரிவித்தார் அண்ணாமலை. அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களில் உள்ள பினாமி நிலங்கள், சொத்துக்கள், கணக்கில் வராத கருப்பு பணம், நகைகள் மற்றும் ஆடம்பர கார்கள் போன்ற விவரங்களையும் அடுத்த கட்டமாக வெளியிடுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

சொத்து பட்டியல் விவகாரத்தால் அதிர்ந்து போன திமுகவினர் அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்துக்களின் காரணமாக மக்களிடையே திமுகவின் மீதான நம்பிக்கை குறைந்து விடுமோ என எண்ணி பீதியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று இரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளரும் பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு, எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மற்றும் எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டி.ஆர்.பாலு ரூ.10 ஆயிரம் கோடி வைத்திருப்பதாக அண்ணாமலை கூறிய செய்தி வைரலாக பரவும் இந்த சூழலில், இந்த நன்றி விழா கூட்டத்தில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேடையில் விமர்சனம் செய்த திமுக பிரமுகர்கள் அனைவரும் அதிமுக குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி விழாவில் பேச தொடங்கிய டி.ஆர். பாலு 'யாரோ வாங்கி கொடுத்த ரஃபேல் வாட்ச்சை கட்டிக்கொண்டு பேசும் அண்ணாமலையை பற்றி பேச நிறைய இருக்கிறது. "என் மானத்துக்கு சவாலாக யாராவது பேசி என் காலை தொட்டால் அவர் தலையை மிதிக்காமல் விடமாட்டேன் இது ஏன் கேரக்டர்" என பேசினார் டி ஆர் பாலு மேலும் தனது பத்தாயிரம் கோடி சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட கோபத்தில் மேடையில் ஆவேசமாக டி.ஆர்.பாலு 'என் தகுதிக்கு அவரைப் பற்றி பேசக்கூடாது, திமுகவுல புதிதாக சேரும் உறுப்பினர்கள் கூட அண்ணாமலையை பற்றி பேசக்கூடாது. அரசியல் அறிவில்லாத! அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நாம் பேசுவது சரி இல்லை. நானே பேசக்கூடாது, இருப்பினும் 10 ஆயிரம் கோடி சம்பாதிப்பதாக என்னைப் பற்றி அவர் அவதூறாக பேசியதின் காரணமாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நோட்டீஸ் கொடுத்து நான் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடர போகிறேன். அதன் பிறகு அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர போகிறேன்' எனக் கூறினார்.

இப்படி அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் காரணமாக அண்ணாமலை மீது கோபம் கொப்பளிக்க திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News