டி.எம்.கே பைல்ஸ் இனிமேல்தான் வேலையே காட்டும் - கண்ணடிக்கும் பாஜக முக்கிய புள்ளி

Update: 2023-05-09 02:25 GMT

டிஎம்கே பைல்ஸ் இனிமேல் தான் சூடுபிடிக்கப் போகிறது

பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் ஆட்சியில் நடந்த ஊழல் பற்றிய அனைத்து விவரங்களையும் வெளியிடப் போவதாக கூறியிருந்தார் அதன்படியே ஏப்ரல் 14ஆம் தேதி டிஎம்கே பைல்ஸ் என்ற தலைப்பில் திமுகவில் உள்ள முக்கிய நபர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டார். அவரது மதிப்பீடு படி திமுக தலைவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய் ஒன்னரை லட்சம் கோடி என்று குற்றம் சாடினார். மேலும் இந்த சொத்து பட்டியலில் ஜெகத்ரட்சகன், எ. வ. வேலு, கே என் நேரு, கனிமொழி, கலாநிதிமாறன், டி ஆர் பாலு, கலாநிதி வீரசாமி, துரைமுருகன், கே பொன்முடி முதல்வரின் மகன் உதயநிதி ஆகியோரின் சொத்து விவரங்களையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு நோபல் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றியும், 2006-11 திமுக ஆட்சி நடந்த பொழுது மெட்ரோ முதல் கட்ட டெண்டரில் முதல்வர் ஸ்டாலின் ஊழல் செய்ததாகவும் அவரது குற்றத்தை பகிரங்கமாக முன் வைத்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்ட ஒரு வாரத்திற்குள் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

வருமானவரித் துறையினர் ரைடு நடத்திய ஜி ஸ்கொயர் உள்ளிட்ட ஐம்பது இடங்களும் திமுகவிற்கு நெருக்கமான இடங்களாகவே கருதப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் வெளியிட்ட அன்றே திமுகவின் கோப்புகள் இந்த ஒரு பகுதியுடன் முடிவடைய போவதில்லை 2024ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஆட்சி செய்த மற்ற கட்சிகளின் விவரங்களும் அம்பலப்படுத்தப்படும், நான் ஊழலை அம்பலப்படுத்தப் போகிறேன் என்றால் எல்லா ஊழலைகளையும் தான் அம்பலப்படுத்த வேண்டும் என்று கூறி அதிமுகவினரையும் பதட்டத்தில் ஆழ்த்தினார்.

வருமானவரி துறையினரின் ரெய்டு பின்னணியில் அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே பைல்ஸ் தான் மூல காரணமாக இருக்கும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாது விமர்சனங்களும் எழுந்து வந்தது. இப்படி அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியிட்ட காரணமாகத்தான் ரெய்டு தொடங்கியது என்று கூறி வந்த நிலையில், தற்பொழுது வருமானவரித் துறையினரின் ரெட்டிர்க்கு அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் காரணம் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலுக்கு இனிமேல்தான் ரெய்டே தொடங்கும் என கூறப்படுகிறது,

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் கூறும்போது, 'ஜி ஸ்கொயரில் ரெய்டு நடந்தது என்பது டிஎம்கே பைல்ஸ் வெளியிட்டதற்கு பிறகு தான் நடந்தது என்பதல்ல பல நாட்களாகவே ஜி ஸ்கொயரைகண்காணித்து அவர்களின் கணக்குகளை ஆய்வு செய்த பிறகு தான் ஜி ஸ்கொயர் மற்றும் அது சம்பந்தப்பட்ட 50 இடங்களில் வருமான வரித்துறையினர் ரைடு நடத்தினர். அதேபோல மற்ற ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை அமைப்புகள் முறையாக ஆய்வு செய்து மற்றொரு ரெய்டு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

எனவே தற்போது பல நாட்களாக நடைபெற்ற ஜி ஸ்கொயரின் வருமான வரித்துறையினர் ரெய்டு முன்னதாகவே வருமானவரித் துறையினரால் கண்காணிக்கப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டு பிறகு நடத்தப்பட்டது. எனவே அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் காரணமாக இன்னும் ரெய்டு நடத்தப்படவில்லை, மேலும் மற்றொரு ரெய்டு நடத்தப்படும் என்றும் தெரிய வருகிறது. ஜி ஸ்கொயர் ரெய்டின் தலைவலியிலிருந்து மீளாமல் இருக்கிறது திமுக அரசு இதில் அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியலால் மற்றொரு ரெய்டு இனிமேல் தான் துவங்க உள்ளது என்று கரு. நாகராஜன் கூறியது அறிவாலய தரப்பை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Similar News