திடீர் தனிக்குடித்தனம் சென்ற உதயநிதி - துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை என கோபமா?
உதயநிதி தனிக்குடித்தனம் போய்விட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது 2021 சட்டமன்ற தேர்தலில்
திமுக முன்னாள் தலைவரும், தனது தாத்தாவுமான கருணாநிதி தொடர்ச்சியாக
போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார் உதயநிதி ஸ்டாலின். முதல் ஒரு
வருடம் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக அமைச்சரவை இரண்டாம்
ஆண்டிலேயே திமுகவின் முக்கிய அமைச்சர் பொறுப்பை வழங்கியது. இளைஞர் நலன்
மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்,
அமைச்சரானவுடன் தமிழக அமைச்சரவை தரவரிசை பட்டியலில் பத்தாவது இடத்தையும்
பிடித்தார்.
அதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படியாக எப்படியும் துணை முதல்வர்
ஆகிவிடுவார் உதயநிதி ஸ்டாலின் என திமுக தரப்பினும் பல்வேறு அரசியலும்
விமர்சகர்களும் கருத்துக்களை முன்வைத்து வந்த நிலையில் சமீபத்தில்
அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ விவகாரத்தின் காரணமாக திமுக அமைச்சரவை பட்டியல்
மாற்றப்பட்டது. அமைச்சர் பி டி ஆர் இலாகா மாற்றப்பட்டு, அமைச்சர் நாசர்
அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதுபோல் பிடிஆர் இடமிருந்து
நிதித்துறை பறிக்கப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை
வழங்கப்பட்டது. இப்படி அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதிக்கு துணை
முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என திமுகவிலேயே நிறைய உதயநிதி
ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் எதிர்பார்த்தது போல் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு