நாச்சியப்பன் பாத்திரக்கடை கப்பு, கள்ளச்சாராய பார்ட்டிக்கே நிவாரணம் - சந்தி சிரிக்கும் திராவிட மாடலின் நிர்வாகம்!
கள்ளச்சாராயம் வித்தவர்களுக்கும் சேர்த்து நிவாரணம் என திமுக அரசு செய்த காரியம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த சாராயம் அருந்திய அனைவருக்குமே வாந்தி மயக்கம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது வரையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்த கொடூர சம்பவத்தில் இதுவரை 22 பேர்உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்றதற்காக தமிழகம் முழுவதும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இது சம்பந்தப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு இன்ஸ்பெக்டர்கள் இரண்டு எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. தமிழக அரசே டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்கப்படுகின்ற நிலையில் இப்படி கள்ளச்சாராயங்கள் சம்பவம் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை எதிர்த்து பல கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கள்ளச்சாராயத்திற்கு எதிராக பல தரப்பிடமிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த ஒரு குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் தொகையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார். அதோடு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டதில் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது, அதாவது கள்ளச்சாராயத்தை காய்ச்சுவதில் முக்கியக் குற்றவாளியாக இருந்த அம்மாவாசை அதே கள்ளச்சாராயத்தை குடித்து விட்டு உடல் உபாதை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஐம்பதாயிரம் ரூபாய் நிவாரணமானது கள்ளச்சாராயத்தை காச்சிய முக்கிய குற்றவாளிக்கும் வழங்கப்படுகிறது என்று அதிமுக சார்பாக பல எதிர்ப்புகள் முன்வைக்கப்படுகிறது. இந்த சர்ச்சை தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளனர் ஆனால் இத்தனை உயிர்களுக்கு காரணமாக உள்ள அமாவாசை என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் இவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்பவரின் தம்பி.
தற்போது இந்த அமாவாசை என்பவருக்கும் கள்ளச்சாராயம் அருந்தி உடல் உபாதைகள் ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 50000 நிவாரணத் தொகை இத்தனை உயிர்களை பெற்று வந்த இவருக்கும் அரசு வழங்கியுள்ளது, கள்ளச்சாராயம் காச்சி உயிரைப் பறித்தவருக்கும் அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல இந்த நிவாரணத்தொகை கொடுக்கப்பட்டிருப்பது இந்தியாவிலேயே ஏன் இந்த உலகத்திலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கிய கோமாளித்தனமான அரசு தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு தான் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.