யாருப்பா இந்த மைதிலி தெரியுதா? அட அவங்களேதான்! - செந்தில்பாலாஜி விவகாரத்தில் மைதிலி வீட்டில் தெறிக்கும் ரெய்டு!

Update: 2023-06-02 15:02 GMT

ரெய்டில் தாறுமாறாக சிக்கிய மைதிலி வினோ, சல்லடை போடும் வருமானவரித்துறை!

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான பல இடங்களில் ரெய்டு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐந்து நாட்களாக நடந்த ரெய்டு ஐந்தாவது நாள் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்தமான நிறுவனத்தில் நடக்கும் அளவிற்கு பல்வேறு ஆவணங்கள், பணம் பரிமாற்றப்பட்ட தகவல்கள் மேலும் 2000 ரூபாய் நோட்டுகளாக கோடிக்கணக்கில் பணம், இது மட்டுமல்லாமல் ஒப்பந்தக்காரர்கள் அதுவும் குறிப்பாக செந்தில் பாலாஜி கையில் வைத்திருக்கும் டாஸ்மாக் துறையின் ஒப்பந்த காரர்கள் பற்றிய விவரங்கள் அந்த ஒப்பந்தக்காரர்களுக்கு குறைந்த விலையில் ஒப்பந்தங்கள் கொடுத்தது மேலும் அவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுப்பதற்காக வைத்திருக்கிறேன் என்று வைத்திருந்த பணம் கட்டு கட்டுகளாக வெளியில் வந்தது பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது.

திமுகவில் இருப்பவர்களே அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டில் நடக்கும் இந்த ரெய்டு குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான கொங்கு மண்டலத்தின் முக்கிய நிர்வாகிகள் வீட்டில் ரெய்டு நடந்து வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் செந்தில் பாலாஜி தரப்பு விழித்து வருகிறது. மேலும் குறிப்பாக முதலில் ரெய்டு துவங்கியது செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் தான் அவரது வீட்டில் தான் அதிகமாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறி அவருக்கு நேரில் வந்து ஆஜராக வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர் அந்த வருமானவரித்துறையினரின் சம்மனுக்கு உடனடியாக பதில் அளிக்காத காரணத்தினால் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக் குமார் தலைமறைவாகிவிட்டார் என்ற தகவல்கள் பரவிய நிலையில் இல்லை நான் சென்னையில் தான் இருக்கிறேன் என அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் விளக்கம் கொடுத்தார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமாக கூறப்படும் மைதிலி வினாவின் வீட்டை வருமானவரி துறையினர் சல்லடை போட்டு சலித்து வருகின்றனர். திமுக நிர்வாகியும், கணக்காளருமான மைதிலி என்பவரது வீட்டிலும் தொடர் சோதனை நடந்து வருகிறது.

திமுகவிலிருந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என கூறிக்கொண்டு பாஜகவில் இருந்து திமுகவிற்கு செந்தில் பாலாஜி முன்னிலையில் தாவிய மைதிலி பினோவின் வீட்டில் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக ரெய்டு நடத்துவதில் அதிரடியாக பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

பாஜக மகளிரணியைச் சேர்ந்த மைதிலி வினோ அமைச்சர் செந்தில் பாலாஜி மூலமாக திமுகவில் இணைந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை சுற்றுப் பயணத்தின் போது மைதிலி லினோ திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மைதிலி வினோ. இவர் பாஜக மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். மைதிலி வினோ பாஜகவில் இருந்து வெளியேற முடிவு செய்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சென்று சந்தித்தார் பின்னர் இதுபற்றி தகவலறிந்ததும் மாவட்ட பாஜக தலைமை அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்தது. பின்னர் திமுகவில் இணைந்தவுடன், 'தளபதி ஐயா, மகளிருக்காக பல திட்டங்களை அறிவித்திருக்கிறார்.. நான் திமுகவில் இருந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்' என முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் இருந்த மேடையில் பேசினார். மேலும் 'நான் திமுகவில் இருந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்' என கூறிக்கொண்டு திமுகவில் இணைந்த மைதிலி வினோ இப்படி டாஸ்மாக் முறைகேடுகளுக்காக வருமானவரித்துறை நடத்தும் ரெய்டில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் பலரிடையே இன்று வரை விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் மேலும் தகவல்கள் கிடைக்கலாம் என்று ஐடி அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Similar News