நாடாளுமன்ற செங்கோல் பற்றி தனியார் தொலைக்காட்சியில் உளறிய திருமாவளவன்!

Update: 2023-06-07 03:46 GMT

இந்தியாவில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாராளுமன்றத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது கட்டுமான பணிகள் முடிந்து விட்டது. 2023 மே 28-ந் தேதி, பிரதமர் மோடி இந்தியாவின் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து இருக்கிறார். பல்வேறு தடைகளை தாண்டி தற்பொழுது தமிழகத்தின் பெரும் அடையாளமான செங்கோல் தேசிய அளவில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம் பெற்று இருக்கிறது.


இப்படி பல்வேறு பெருமைகளை வாய்ந்த செங்கோல் தற்போது நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. ஆனால், புதிய பாராளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்தார்கள். மேலும் தமிழகத்தின் செங்கோல் வைப்பதற்கு எதிர்க்கட்சிகளும் மற்றும் இடதுசாரிகளும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார்கள்.


பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் இப்படி ஒரு வரலாற்று அம்சம் இடம்பெரும்பாகில் இந்த ஒரு திறப்பு விழாவில் பாஜக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது. இதன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் இதற்கு கடும் எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் கிளப்பு வந்தார்கள். ஆனால் இவை அனைத்தையும் முறியடித்து பாஜக தற்பொழுது நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து வெகு விமர்சியாக செங்கோலை நிறுவி இருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் நந்தி சிலை இருப்பதால் நான் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அப்போது கூறியிருந்தார். நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதற்காக அப்போது எதிர்க்கட்சி என்னென்ன போலியான சாக்குப் போக்குகளை சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு பல்வேறு காரணங்களை சொல்லி புறக்கணித்தது.


பாராளுமன்ற திறப்பின்போது, தமிழகத்தில் இருந்து வழங்கப்படும் செங்கோலிலுள்ள நந்தி சிலை மதச்சின்னமாக இருப்பதால் எதிர்க்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது, "மக்களவை, மாநிலங்களவையின் தலைவராக இருப்பவர் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு. நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாக்கு இவரையும், குடியரசு துணைத் தலைவரும் புறக்கணிக்கப்படுவது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. ஜனநாயகத்தை கொச்சைபடுத்தும் செயல். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சிகளும் புறக்கணிக்கப் பட்டுள்ளது.

நாங்களும் இந்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் நிகழ்வை புறக்கணிக்க இருக்கிறோம். மேலும் நாங்கள் மே 28 ம் தேதியை (திறப்பு விழா) கருப்புதினமாக அனுசரித்து, கருப்பு சட்டையணிந்து கருப்பு கொடி ஏற்றுவோம். செங்கோல் என்பது மதசார்பற்றது என்றாலும், அதிலுள்ள நந்தி சிலை மத சின்னமாக இருப்பதால் எதிர்க்கிறோம். மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் பாஜவை எதிர்கின்றோம்" என்றெல்லாம் கூறி இருந்தார்.


அது மட்டுமல்லாது தனியார் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உளறிய வீடியோ தான் தற்போது சமூக தளங்களில் பெரும் வைரல் ஆகி வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்கள் திருமாவளவன் அவர்களிடம் நாடாளுமன்ற திறப்பு விழாவை ஏன் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள் அதற்கு என்ன காரணம் என்று? தெளிவாக கேட்டிருந்தார். அதற்கு முன்பு தான் அவர் நாடாளுமன்ற இந்து மத சடங்குகள் மட்டுமல்லாது, சர்வ மத பிரார்த்தனையும் நடைபெற்றது என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆதீனங்களை வைத்து இந்து மத சடங்குகள் மட்டுமல்லாது, சர்வமத சடங்குகளும் நடைபெற்றுள்ளது. இது தெரியாமல் திருமாவளவன் இந்து மத சடங்குகளை மட்டும் வைத்திருக்கிறார்கள் அதனால் தான் நான் அதை புறக்கணிப்பதாக ஏறுக்கு மாறாக பேசியிருக்கிறார். இப்படி செங்கோல் விவகாரத்திலும் நாடாளுமன்ற திறப்பு விழா விவகாரத்திலும் நிகழ்ச்சிக்கு போகாமலேயே திருமாவளவன் அரசியல் பேசிய உளறி வருவது சமூக வலைதளத்தில் கேலி பொருளாகிவிட்டது.

Tags:    

Similar News