தெனாவெட்டாக பேசி திரிந்த நடிகர் பிரகாஷ் ராஜ்க்கு ஆட்டம் காட்டிய அண்ணாமலை..

Update: 2023-06-10 03:14 GMT

நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை பற்றி விமர்சிப்பதிலும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் அவ்வப்பொழுது சமூக வலைத்தளங்களில் தெனாவட்டாக பேசி வருபவர். பாஜகவை விமர்சிப்பதில் முதல் ஆளாக சமூக வலைத்தளங்களில் காரசாரமான கருத்துக்களை பதிவிடுவார். அது மட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முதல் ஆளாக கருத்துக்களை சொல்பவர். சமீபத்தில் கூட கர்நாடகாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவில் பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருந்தார்.

கர்நாடகாவில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் 2024ம் ஆண்டுக்குள் சண்டையிட்டு கொள்வார்கள். காங்கிரஸ் அரசு ஓராண்டில் சீட்டு கட்டுபோல் சரிந்துவிழும் எனக்கூறிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடியோ வேகமாக அப்போது பரவும் நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளார்.இந்த வீடியோ ANI ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. இதனை பார்த்த நடிகர் பிரகாஷ் ராஜ் அண்ணாமலையை கிண்டல் செய்தார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐபிஎஸ்ஸாக இருந்தாலும் அவருக்குள்ளே ஒரு நித்யானந்தா இருக்கிறார். மக்கள் ஒதுக்கி தள்ளியதில் கீழே விழுந்தாலும் கூட மீசையில் மண் ஒட்டவில்லை எனக்கூறுவது முட்டாள்த்தனமானது" என தெரிவித்துள்ளார்.


அது மட்டுமல்லாது மற்றொரு நிகழ்வில் கூட பாஜக அரசு மீது தான் தவறு இருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து அடுத்த நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அவரது அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப் பட்டது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார், "அன்புள்ள ராகுல் காந்தியே.. இந்த நாட்டை கொடுங்கோலர்களிடம் இருந்து காப்பாற்ற விரும்பும் ஒவ்வொருவரின் இல்லமும் உங்கள் வீடு தான்.. இந்தியாவே உங்கள் வீடு தான்.. உங்களுக்கான ஆற்றல் அதிகம்.. நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்'' என கூறியுள்ளார். இதன் மூலம் வெளிப்படையாகவே காங்கிரஸிற்கு முழுமையாக ஆதரவு தெரிவிக்கும் நபராகவே இந்த பதிவின் மூலம் அறியப்பட்டார்.


எந்த ஒரு சூழ்நிலையில் சமீபத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வைரமுத்துவை விமர்சித்து இருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், கவிஞர் வைரமுத்து மீது இதுவரை 19 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஒருமுறை கூட அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் டெல்லியில் மல்யுத்த விராங்கனைகளில் குற்றச்சாட்டுகளில் பாஜக எம்.பி மீது 2 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சட்டம் அனைவருக்கும் பொதுவானது. குற்றம்சாட்டப் பட்டவரை கைது செய்தால் தான் அது குறித்து பேசுவேன் என்பது தவறான ஒன்று. இதுவரை ஜந்தர்மந்தரில் அவர்கள் போராட்டம் நடத்த முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால், நேற்றைய சம்பவத்தில் எந்தவித உரிமையும் பெறாமல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக சென்றால், டெல்லி காவல் துறையினர் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார்.


இதனால் கோபம் கொண்ட பிரகாஷ்ராஜ் அவர்கள், சமீபத்தில் தம் அளித்த தொலைக்காட்சி பேட்டியில் ஒன்றில் அண்ணாமலை பற்றி கூறியிருக்கிறார். கலைஞர் பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கு? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி இருந்தார். வைரமுத்துவை அண்ணாமலை அடித்த அடியின் மூலம் பிரகாஷ் ராஜிற்கு கோபம் ஏற்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News