ஆவினில் சிறார்கள்... திமுக ஆட்சிக்கு ஏற்படும் அபாயம்...

Update: 2023-06-12 02:19 GMT

ஆவின் நிறுவனம் இதுவரைக்கும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. ஆனால் தற்பொழுது மிகப்பெரிய சர்ச்சையாக சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் ஆவின் நிலையத்தில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு பணியமர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை அம்பத்தூரில் அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினில் சிறார்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருப்பதாகப் புகார் கிளம்பியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் ஐஸ்கிரீம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று நோக்கத்தில் வெளியில் இருந்த ஆட்கள் வழக்கமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் அதில் 30-க்கும் மேற்பட்ட சிறார்கள் ஐஸ்க்ரீம் பேக்கேஜில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் செய்த பணிக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இந்த ஒரு செய்தி தான் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  


தற்போது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதன் காரணமாக கோடை விடுமுறையை பயன்படுத்தி எங்கேயாவது வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆவின் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆவின் ஒப்பந்த நிறுவனம் ஒன்று, 12-ம் வகுப்பு படித்த சிறுவர், சிறுமிகளைச் சிறார் தொழிலாளர்களாகப் பணியில் அமர்த்தியிருக்கிறது என்கிறார்கள்.

இந்த ஒரு சூழ்நிலையில் தான் பணியமர்த்தியை சிறார் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே இதன் காரணமாக சிறார் தொழிலாளர்கள் ஊதியத்திற்காக போராட்டம் நடத்தும் வீடியோ காட்சியானது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பலரும் தங்கள் கண்டனங்களை முன்வைத்தனர்.  


தற்போது ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனம், குறைவானவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டு, அரசிடம் முழுத் தொகையைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஆகவே, ஆட்கள் பற்றாக்குறை, செலவைக் குறைக்க சிறார் தொழிலாளர்களை நியமித்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எனினும், இதைத் தீவிரமாகக் கண்காணித்திருக்க வேண்டியது அரசின் கடமைதான்.

அதை அரசு செய்ய தவறு இருக்கிறது என்பது இதன் மூலமாக நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் ஏற்கனவே ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் நிறுவனம் களமிறங்கி இருப்பதாக மத்திய அரசு வரை பிரச்சனையைக் கொண்டு சென்ற தமிழக அரசு ஏன் இத்தகைய உள் பிரச்சினைகளை தீர்க்க வழிவகை செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க இல்லையென்று பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து உள்ளார்கள்.  


இந்த சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தம் தொடர்பாக திமுக ஆட்சிக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிக்கையாளர் மணி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியின்போது இது பற்றி அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் மேலும் கூறும் பொழுது, ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தம் என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு.

இதுவரை ஆவினில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆவின் மீது பால் குறைவாக இருக்கிறது, மேலும் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை அதிகரிப்பது, தகுதியில்லாத நபர்களை பணியை அமர்த்துவது இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இவை பெருமளவில் ஆட்சியில் மாற்றத்தை நிகழ்த்தாது.. 


ஆனால் தற்பொழுது சிறார் தொழிலாளர்கள் பணி அமர்த்தம் என்பது திமுக ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இது ஒரு முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படும். இதுபோல ஏற்கனவே சிவகாசி பட்டாசுக்கு உலக அளவில் பெரும் தேவை இருந்தது ஆனால் சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பெருமளவு சிறார்களை பணியமருத்துதல் காரணமாக சிவகாசி பட்டாசிற்கு உள்ள மவுசு குறைந்து தற்போது சீன பாட்டாசுகள் அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

அதேபோல தற்பொழுது அரசு நிறுவனமான ஆவின் நிறுவனமும் சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தம் அவர்களுக்கு ஊதியம் ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற பிரச்சனை அரசாங்கத்தை பெரும் அளவில் பாதிக்கும் என்று மூத்த அரசியல் விமர்சகர் கூறியிருப்பது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

Tags:    

Similar News