கரூரில் நடந்த மோசடி... கண்டு கொள்ளாமல் பதுங்கிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி..

Update: 2023-06-13 06:35 GMT

2019 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கரூரிலிருந்து மக்களவைக்கு காங்கிரஸ் சார்பாக தேர்வானார். கரூரில் காங்கிரஸ் MPயாக ஜோதிமணி தேர்வு செய்யப்பட்டவர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பொழுதும் பாஜக அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருவார். குறிப்பாக அவருடைய சமூக வலைத்தளம் பக்கங்களில் பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை தொடர்ச்சியாக பார்க்க முடியும். அண்மையில் கூட நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது, காங்கிரஸ் கட்சியையும் முன்னாள் பிரதமர் நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையும் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என மதுரை ஆதீனத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் எம்பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோதிமணி கூறும்போது, 'மதிப்பிற்குரிய மதுரை ஆதீனம் அவர்கள், இந்தியாவின் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் மோடியின் புகழ்பாடி, மனுநீதியை தூக்கிப்பிடிக்க விரும்பினால் தாராளமாகச் செய்யலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியையும், நேரு உள்ளிட்ட மாபெரும் தலைவர்களையும் தவறாக விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.


ஆனால் தங்களுடைய சொந்த தொகுதியில் ஏதேனும் ஒரு தவறு நடந்தால் அதற்கு எந்த ஒரு பதிலையும் கூறாமல் சமூக வலைத்தளங்களில் சைலன்ட் ஆகி விடுகிறார். அந்த வகையில் தற்போது கரூர் தொகுதியில் அரசின் பயன்பெறும் திட்டமான நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நபரை கைது செய்து இருக்கிறார்கள். 

100 நாள் வேலை திட்டத்தில், 49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, காங்.,கைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு ஒன்றை பதிந்தனர். கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மருதுார் ஊராட்சி மன்ற தலைவர்பூர்ணிமா இவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 100 நாள் வேலை திட்டத்தில் பணி ஒதுக்கீடு, பணியாளர்களுக்கு பணி அட்டை வழங்கும் பொறுப்பை ஊராட்சி தலைவர்கள் கவனிக்கின்றனர். பூர்ணிமா பதவியேற்றது முதல், 1,878 பேருக்கு பணி அட்டை வழங்கி உள்ளார். இதில், 319 பேர் திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் என்று இப்போது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


முறைகேடாக பணி அட்டை பெற்றவர்களில் சிலர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். அரசு விதிகளுக்கு மாறாக ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், 40 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர், அரசு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர், நிலவள வங்கி காவலர், வேறு ஊரில் வசிப்பவர்கள் என்று தகுதியற்ற பலருக்கும் பணி அட்டை வழங்கி சம்பளம் தரப்பட்டுள்ளது. அதாவது இல்லாமல் இருக்கும் ஆட்களுக்கு அனைத்து விதமான சமூக அடையாள அட்டைகளையும் வாங்கி அவர்களும் வேலை செய்ததாக பணமோசடியில் ஈடுபட்டு இருக்கிறது தெரிய வந்து இருக்கிறது.

இவர்கள் யாருமே அரசு திட்டத்தில் வேலை செய்யாத போதிலும், அவர்கள் பெயரில் சம்பளம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அரசுக்கு, 49 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


இதையறிந்த, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நடவடிக்கை காரணமாக கரூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இப்படி தன் தொகுதியில் நடைபெறும் குற்றங்களுக்கு ஏன் குரல் கொடுக்காமல் இருக்கிறார். இது தொடர்பாக அவர் தற்பொழுது கருத்து கூற வேண்டும் என்று பல்வேறு இணையதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Tags:    

Similar News