தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு செய்தியாக, திமுக அமைச்சர்கள் மீது நடந்து வரும் ரெய்டு நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு பல்வேறு தரப்பினர்களாலும் பேசப்பட்டு வருகிறது. அடுத்து எந்த அமைச்சர் மாட்டிக்கொள்ளப் போகிறார் என்ற ஒரு அச்சத்தில் திமுக மேலிடம் இருந்தாலும், சட்டத்தின் முன்பு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையில் மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யும் நடவடிக்கை தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் 17 மணிநேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு அவர் இரவில் கைது செய்யப்படும் நிலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி வந்ததால் அவர் ஓமத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் மனைவி கேட்டுக்கொண்டதால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்துவரும் செந்தில் பாலாஜி 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கேட்டுக் கொண்டது.
ஆனால் எட்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தவரே காவலில் எடுத்து அவரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆக இருக்கும் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
இந்த வழக்கில் இணை குற்றவாளியான அமைச்சரின் மகன் கௌதமசிகாமணி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனவே விரைவில் இவர்கள் மீதும் அமலாக்க துறையினர் ரெய்டு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 2007 மற்றும் 2011 க்கு இடையில் பொன்முடி தனது சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பதவியை துஷ்பிரயோகம் செய்ததற்காக குவாரி உரிம நிபந்தனைகளை மீறி கருவூலத்திற்கு ₹28 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இந்த வழக்கு தொடர்புடையது.