பாட்னாவில் நடந்த களேபரம் - ஐயோ ஆள விடுங்க என ஓடிவந்த முதல்வர் ஸ்டாலின்!

Update: 2023-06-25 03:59 GMT

தேசிய அரசியலா ஆளை விடுங்க சாமி என்று முதல்வர் ஸ்டாலின் பாட்னாவில் இருந்து அவசரமாக சென்னை வந்த செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று 15 கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று இரவு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வேகமாக வைரல் ஆகி வருகிறது.


இதற்கு முன்பு கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவான மார்ச் ஒன்றாம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்காக அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது திமுக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் "எங்களது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி தொடரும். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ளது இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். தமிழ்நாடு பா.ஜ.க.,விற்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை.


தமிழ்நாடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பா.ஜ.க அரசியல் செய்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்திலும் பா.ஜ.க தலையீடு செய்து வருகிறது" என்று தெரிவித்து இருந்தார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அன்று அவர் கூறும் போது, "இந்தியாவில் இருக்கும் முதல்வருக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கக் கூடிய மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பேசுவதற்காக இந்தியாவே வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள். நமது தலைவர் ஏற்புரை ஆற்ற இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் தான் தேசிய தலைவர் என்பது போல் அவர் குறிப்பிட்டு இருந்தார்.


அதுமட்டுமல்லாது அவர் மேலும் குறிப்பிடும் பொழுது, தலைவரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே முக்கியமான விழாவாக மாற இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்களை விளைவிக்கப் போகும் மகத்தான பல்வேறு செயல்களுக்கு தொடக்கமாகவும் அமையப் போகிறது என்று ஏற்கனவே சூசகமாக, தேசிய தலைவர் தான் எங்கள் தலைவர் ஸ்டாலின் என்பது போல் அவர் குறிப்பிட்டு திமுகவும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் முழங்கி வந்தன!

அன்றிலிருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எல்லாரும் ஒரு தேசிய தலைவர், மேலும் கோபாலபுரம் தான் டெல்லியை முடிவு செய்யும் என்பது போல பல்வேறு கற்பனைக் கோட்டைகளை எல்லாம் கட்டி வந்தனர் திமுகவினர், குறிப்பாக சமூக வலைத்தளங்களில் திமுகதான் அடுத்த பிரதமரை முடிவு செய்யப்போகிறது என்கிற ரீதியில் எல்லாம் திமுக ஆதரவாளர்கள் கூறி வந்தார்கள்!


இந்த நிலையில் நேற்று பாட்னாவில் தேசிய கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள் எதிர் வாதத்தை முன்வைத்த காரணத்தினால் சுமூகமான முறையில் நடைபெற வேண்டிய ஆலோசனை கூட்டம் தற்போது தங்களுக்குள் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் சலசலப்பை ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக மிகப்பெரிய கனவுடன் சென்ற மு.க.ஸ்டாலின் ஏமாற்றத்தை சந்தித்து சென்னை திரும்பி இருக்கிறார்.

குறிப்பாக பாட்னாவில் ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் சென்னைக்கு அவசரமாக வந்து இங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி இருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தேசிய அரசியலில் கால் பதிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் இத்தனை நாள் வரை கண்ட கனவு தகர்ந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Tags:    

Similar News