விடாத வருமான வரித்துறை... செந்தில் பாலாஜி தரப்பினரை துருவி துருவி தோண்டும் ரெய்டு..

Update: 2023-06-25 04:00 GMT

கடந்த மாதத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது ஆதாரத்துடன் பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த மாதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. குறிப்பாக இந்த ரெய்டானது சுமார் 8 நாளாக அதிகாரிகள் கடுமையாக விசாரணையை நடத்தினார்கள்.  


செந்தில் பாலாஜி மட்டுமில்லாத அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் ரெய்டுகள் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்தியாவில் நடந்த பெரிய ரெய்டுகளில் ஒன்றாக அதிலும் நீண்ட ரெய்டுகளில் ஒன்றாக இந்த ரெய்டுகள் பார்க்கப்படுகின்றன. 


அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஒப்பந்தம், மின்சாரத்துறையில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள் முதலில் 40ல் தான் ரெய்டு நடந்தது. அவரின் தம்பி அசோக் வீட்டில் 2 நாட்கள் மட்டுமே ரெய்டு நடந்தது. ஆனால் முதல் நாளே 40 இடங்கள் 200 இடங்களாக உயர்த்தப்பட்டது.


கிட்டத்தட்ட 200 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை இரண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியை குறிவைத்து அவருக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களுடன் தற்போது களமிறங்கி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அமலாக்கத்துறை தற்போது அவர்கள் தரப்பில் விசாரணையை மேற்கொண்டு வந்தாலும், வருமான வரி துறையும் ஏற்கனவே நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட முக்கியமான ஆவணங்கள், பென்டிரைவுகள், பணம், சொத்து பத்திரங்கள் முதலியவற்றை வைத்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அது பற்றி அவரிடம் விசாரணை நடத்தவும் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனையை மேற்கொண்டார்கள்.  


ஏற்கனவே சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட முக்கியமான இடங்களில் மீண்டும் சீல் நீக்கி மீண்டும் வருமான வரித்துறையினர் அங்கு சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் வருமான வரி துறையினருக்கு முக்கியமான ஆவணம் ஒன்று சிக்கி இருப்பதாக தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் அதிரடியாக கரூர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீட்டில் வருமான வரி சோதனையை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

ஏனெனில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது இருந்த முக்கியமான குற்றச்சாட்டாக இருந்து வரும் பாட்டில்களுக்கு ரூபாய் 10 வருமானத்தை அவருக்கு பெற்று தந்த கரூர் கேங்கை நடத்தியதாக கரூர் சக்தி மிஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவரை குறிவைத்து தற்பொழுது வருமானவரித்துறை சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். சோதனைக்குப் பிறகும் கரூர் கேங் ஆட்டம் அடங்கவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் வருமான வரித்துறை உள்ளே களமிறங்கி இருக்கிறது. மேலும் இது பற்றி பல்வேறு தகவல்களையும் வருமான வரித்துறையினர் விரைவில் வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  


அதுமட்டுமில்லாமல் கரூர் கேங்க் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்துவந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் நிலையில் இந்த வருமானவரித்துறை ரெய்டு முக்கியமானதாக பார்க்கபடுகிறது.

Tags:    

Similar News